பக்கம்:தமிழ் விருந்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் விருந்து இளவரசரொருவரால் இயற்றப்பட்டது. சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் தமிழ்ப்பாமாலை புனைந்து சிவபெருமானை வணங்கினார். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் தமிழிலே திருப்பாசுரம் பாடித் திருமாலைப் போற்றினார். இவ் விருவரும் சேரநாட்டுப் பெருமன்னர். ஆயினும், சேரநாட்டிற்கும் ஏனைய தமிழ் நாடுகளுக்கும் இடையே பெரிய மலை தடையாக நின்றமையால் போக்குவரவுச் சாதனம் குறைந்தது. காலம் செல்லச் செல்ல மலையாளமும் தமிழும் வேறு வேறு ஆயின. தமிழோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்ற கன்னடம் பேசுகின்ற மக்களைக் கருநாடர் என்று சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. கருநாடகம்' என்பது கருநாடர் வாழ்ந்த தேசத்தின் பெயர். அந் நாடு கருநிறம் வாய்ந்த திலப்பரப்பாய்க் காணப்பட்டமையால், தமிழ் நாட்டார் அதற்குக் கருநாடகம்' என்று பெயரிட்டனர் போலும். 'கருநாடகம்' என்பதே பிற்காலத்தில் கன்னடம் எனச் சிதைந்தது. 'கருநாடகம்' என்னும் சொல், 'பழமை என்ற பொருளில் இன்றும் தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றது. நவநாகரிகத்துக்கு ஏற்ற நடையுடையில்லாதவர்களும், பழைய வழக்கங்களைக் கைவிடாதவர்களும் "கர்நாடகப் பேர்வழிகள் என்று எட்டியும் கட்டியும் பேசப்படுகின்றார்கள். கருநாடக தேசத்தார் கைவண்ணம் திருநெல்வேலி ஜில்லாவிலே காணப்படுகின்றது. தாம்பிரவர்ணி யாற்றில் அமைந்துள்ள பழைய அனையொன்று கன்னடியன் அனை' என்று பெயர் பெற்றுள்ளது. கன்னடியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/84&oldid=878586" இலிருந்து மீள்விக்கப்பட்டது