பக்கம்:தமிழ் விருந்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ்_விருந்து எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப் பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே யாழ்ப்பாணம்' என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் 'ஜாப்னா' என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர். முன்னாளில் இலங்கையை விட்டுத் தமிழ் நாட்டிற் குடியேறியவரும் உண்டு. இன்று தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் காணப்படுகின்ற ஈழவர்' என்னும் சாதியார் ஈழநாட்டிலிருந்து வந்தவராதலால் அப்பெயர் பெற்றார்கள். இன்னும் திருநெல்வேலியிலுள்ள 'இல்லத்துப் பிள்ளைமார்' என்பார், ஈழத்துப் பிள்ளைமாரே யாவர். 'ஈழத்துப் பிள்ளை' என்பது இல்லத்துப் பிள்ளையெனச் சிதைந்து வழங்குகின்றது. முற்காலத் தமிழரசர் சிலர் இலங்கைக்குச் சென்றார்கள். இலங்கை அரசர் சிலர் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். சேர நாட்டரசனாகிய செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு வஞ்சி மாநகரத்தில் கோயில் கட்டித் திருவிழாக் கொண்டாடிய பொழுது இலங்கை அரசனாகிய கயவாகு மன்னன் வந்திருந்து அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/86&oldid=878590" இலிருந்து மீள்விக்கப்பட்டது