பக்கம்:தமிழ் விருந்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் 德5 காட்சியைக் கண்டு களிகூர்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. அம் மன்னன் அரசு புரிந்த காலம் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியென்பர் கண்ணகியின் காட்சியைக் கண்களிப்பக் கண்ட கயவாகு மன்னன், ஈழ நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து, ஆடி மாதந்தோறும் அணிவிழா எடுத்தான். அவன் காலம் தொட்டு, பத்தினிக் கடவுள் வழிபாடு இலங்கையிற் பரவலாயிற்று. இலங்கையிலிருந்த பத்தினிக் கடவுளின் படிவம் ஒன்று கடல் கடந்து, லண்டன் மாநகரில் உள்ள கண்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது. இன்னும், இலங்கையிலுள்ள கண்டி மாநகரத்தில் பரராஜ சிங்கன் என்பவன் அரசுபுரிந்த காலத்தில் கடும்பஞ்சம் வந்துற்றது. ஈழ நாட்டார் பசியால் நலிந்து மெலிந்து வருந்தினர். அவர் பட்ட துயரம் கண்டு ஆற்றாத கண்டியரசன், தமிழ் நாட்டிற் பெருஞ் செல்வராய் விளங்கிய சடையப்ப வள்ளலாரிடம் தன் குறையைத் தெரிவித்தான். உடனே, வள்ளலார் வயலில் விளைந்த நெல், கப்பல் ஏறி ஈழ நாட்டிற் சென்று சேர்ந்தது; பசி தீர்ந்தது. பஞ்சத்தின் கொடுமை தீர்த்த சடையப்ப வள்ளலைப் பரராஜ சிங்கன் தரும தேவதை' என்று புகழ்ந்தான் நெஞ்சார வாழ்த்தினான். அவ் வாழ்த்து ஒரு செஞ்சொற் கவியாயிற்று : "இரவு நண்பக லாகி லென்பகல் இருள றாஇர வாகிலென் இரவி எண்டிசை மாறி லென்கட லேழும் ஏறிலென் வற்றிலென் மரபு தங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென் - - ஆகிலென் வளமை இன்புறு சோழ மண்டல வாழ்க்கை காரணமாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/87&oldid=878592" இலிருந்து மீள்விக்கப்பட்டது