பக்கம்:தமிழ் விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் தெலுங்கு - 37 என்று அவ்வாசிரியர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் கூறிப் போந்தார். எனினும், இக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. தென்னிந்திய மொழிகள் எல்லாம் ஒர் இனம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்று கூறி அமைபவரே பலர் ஆவர். திராவிட மொழிகளுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் என்பதில் யார்க்கும் தடையில்லை. இலக்கியப் பண்பும், இலக்கண வரம்பும், சொல்லின் செல்வமும் தமிழிலே தலை சிறந்து காணப்படும். இவற்றுள் சொல்லின் செல்வத்தைச் சிறிது பார்ப்போம் : முதலில் நாம் குடியிருக்கும் வீட்டை எடுத்துக்கொள்வோம். வீடு என்றாலும், இல் என்றாலும், மனை என்றாலும் அகம் என்றாலும் பொருள் ஒன்றே. இல் என்பது இல்லம் என்று வழங்கும். இல்லத்துக்கு உரியவள் இல்லாள் எனப்படுவாள். "இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை' என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம் இல்லறம் எனப்படும். இல் என்பது இல்லு என்றும், இல்லாள் என்பது இல்லாலு என்றும் தெலுங்கில் வழங்குகின்றன. மலையாளத்தில் இல் ೯TETLIg இல்லம் என வழங்கும். வீட்டைக் குறிக்கும் மற்றொரு சொல் மனை. மனைக்குரியவளை மனைவி என்றும், மனையாள் என்றும் கூறுவர் தமிழர் மனையில் இருந்து செய்யும் அறம் மனையறம் எனப்படும். மனை என்பது கன்னடத்தில் உண்டு; தெலுங்கில் இல்லை. மனை வாழ்க்கை என்பது கன்னடத்தில் 'மனெவார்த்தெ' என வரும். அகம் என்ற சொல்லும் தமிழில் வீட்டைக் குறிக்கும். சிலர் அகம் என்பதை ஆம் என்று சிதைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/89&oldid=878596" இலிருந்து மீள்விக்கப்பட்டது