பக்கம்:தமிழ் விருந்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழ் விருந்து படும். பாசனத்திற்கு ஏரியும், குளிப்பதற்குக் குளமும் அமைந்தவாறே குடிப்பதற்குரிய நீர் நிலையும் உண்டு. அஃது ஊருணி என்று பெயர் பெறும் ஊரார் எல்லாம் நீர் உண்பதற்குரிய ஊருணியில், எவரும் அழுக்குற்ற ஆடைகளைத் துவைக்க மாட்டார்கள் இறங்கிக் குளிக்க மாட்டார்கள், ஊருணியின் தன்மையைத் திருவள்ளுவர் குறித்துள்ளார். "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்பது திருக்குறள். அறிவாளனிடம் அமைந்த செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போன்றது என்பது இக் குறளின் கருத்து. சிறு குளம் கேணி என்று பெயர் பெறும். அழகிய அல்லி மலர் நிறைந்த கேணியைச் சுற்றி எழுந்த ஊர் திருவல்லிக்கேணி என வழங்கு கின்றது. ஆழமான நீர் நிலை மடு என்றும், கயம் என்றும் கூறப்படும். "ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்' என்ற பாட்டால் மடுவின் தன்மையை அறியலாம். கயம் என்பது கசம் என்று இக் காலத்தில் வழங்குகின்றது. ஆகவே ஏரி, குளம், ஊருணி, கேணி, மடு, கயம் இவை பலவகைப்பட்ட நீர் நிலையைக் குறிக்கும் பான்மையை உணர்கின்றோம். இவற்றுள் குளம் என்பது கொலனு என்றும், மடு என்பது மடுகு என்றும் தெலுங்கில் வழங்கும். முற்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கி வந்த சொற்கள் சில இக்காலத்தில் வழக்காற்றில் இல்லை. அத் தகைய சொற்களில் ஒன்று அங்காடி அங்காடி என்பது இன்று வழக்கற்ற சொல்லாய்விட்டது. அங்காடி என்றாலும், பசார் என்றாலும் பொருள் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/92&oldid=878604" இலிருந்து மீள்விக்கப்பட்டது