பக்கம்:தமிழ் விருந்து.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் தெலுங்கு 91 ஆனால், அங்காடி என்பது தமிழ்ச் சொல், பசார் என்பது பாரசீகச் சொல். இருவகையான அங்காடிகள் பண்டைத் தமிழ் நாட்டில் இருந்தன, பகற்பொழுதில் நடைபெறும் அங்காடி நாளங்காடி என்றும், அந்தி மாலையில் நடைபெறும் அங்காடி அல்லங்காடி என்றும் பெயர் பெற்றிருந்தன. முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்த நாளங்காடியைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. "கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஒதையும், நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி" என்பது சிலப்பதிகார வாசகம். அந்திப் பொழுதில் திறந்து நடைபெறும் அல்லங்காடியை இக்காலத்தில் குசிலிக்கடை (Evening Bazaar) என்கிறோம். குசிலிக் கடை என்னும் சொல்லில் உள்ள குசிலி என்பது குசிரி என்ற அரேபியச் சொல்லின் சிதைவு. ஆகவே, நாளங்காடி என்ற தமிழ்ச் சொல்லை இழந்து பசார் என்னும் பாரசீகச் சொல்லை வழங்குகின்றோம். அல்லங்காடி என்ற நல்ல ஒசையுடைய சொல்லை இழந்து, குசிலி என்னும் அரேபியச் சொல்லை வழங்குகின்றோம். ஆயினும் அங்காடி மற்ற திராவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது. அங்காடி என்பது தெலுங்கிலும் கன்னடத்திலும் பசாரைக் குறிக்கும். மலையாளத்திலும் அங்காடி என்பது அதுவே. தமிழ் நாட்டில் ஏட்டுத் தமிழுக்கும் வீட்டுத் தமிழுக்கும் வேற்றுமையுண்டு. ஒரு குலத்தார் பேசும் தமிழுக்கும் மற்றொரு குலத்தார் பேசும் தமிழுக்கும் வேற்றுமை காணலாம். ஒரு சாரார், எனக்கு என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/93&oldid=878606" இலிருந்து மீள்விக்கப்பட்டது