பக்கம்:தமிழ் விருந்து.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - தமிழ்_விருத்து இனி, பேசும் முறையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம்; பேசும் முறை பல வகைப்படும். அம் முறைகளுக்கு ஏற்ற சொற்கள் தமிழில் அமைந்திருக் கின்றன. ஒருவன் விளக்கமாக விரித்துப் பேசினால், உரைத்தான் என்போம்; எல்லோரும் அறியப் பரக்கப் பேசினால், அறைந்தான் என்போம்; பல கூறுகளாகப் பிரித்து வகைப்படுத்திப் பேசினால், கூறினான் என்போம்; தெளிவாகவும் உறுதியாகவும் பேசினால் செப்பினான் என்போம். இவற்றுள் செப்பு என்பது தெலுங்கில் பெரிதும் வழங்குகின்றது. தமிழ் இலக்கியங்களில் செப்பு என்ற பதம் உண்டு. "பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே” என்று வேண்டுகின்றார் தாயுமானவர். மதுரை மாநகரில் கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் முன்னே நின்று தேரா மன்னா செப்புவ துடையேன், என்று வழக்குரைக்கத் தொடங்கினாள். சொல்லாடல் என்றாலும் பேசுதல் என்றாலும் பொருள் ஒன்றே. 'கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழியைக் கேட்டிருக்கின்றோம். "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்" என்று திருவள்ளுவரும் கூறினார். சொல்லாட என்பதற்கு நேரான தெலுங்கு மாட்டாட என்பது. மாற்றம் என்னும் தமிழ்ச் சொல் தெலுங்கில் மாட்ட என்றாகும். மாற்றம் என்றால் சொல். வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, "மாற்றம் மனம் கழிய நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/96&oldid=878612" இலிருந்து மீள்விக்கப்பட்டது