பக்கம்:தமிழ் விருந்து.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு 95 மறையோன்" என்றார் மாணிக்கவாசகர். மாற்றம் என்பது தமிழிலே ஏட்டு வழக்கில் உண்டு; நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே மாட்ட என்பது பெருவழக்காக உள்ளது. பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் உள்ள ஒற்றுமையைச் சிறிது பார்ப்போம் : உருண்டைக் கட்டியைப் பேச்சுத் தமிழில் உண்டைக்கட்டி என்பர். மழலைப் பேச்சில் பருப்பு என்பது பப்பு என்றாகும். இவ் வகையான சொற்கள் தெலுங்கில் பலவாகும். பருப்பு என்பது பப்பு என்றும், செருப்பு என்பது செப்பு என்றும் நெருப்பு என்பது நெப்பு என்றும், பருத்தி என்பது பத்தி என்றும், மருந்து என்பது மந்து என்றும் தெலுங்கில் வழங்கும். இன்னும் குழைந்த ஓசையுடைய ழகரமும், வல்லோசையுடைய றகரமும் திராவிட மொழிகளின் சிறப்பெழுத்துக்கள் என்பார். இவற்றுள் ழகரத்தைத் தெலுங்கு பழங்காலத்திலேயே இழந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதனாலே அழுத்து என்பது அத்து என்றும், உழுந்து என்பது உத்தலு என்றும், கொழுப்பு என்பது கொவ்வு என்றும் தெலுங்கிலே வழங்கக் காண்கிறோம். இவ்வாறு ழகரத்தை நழுவ விடுதல் பேச்சுத் தமிழில் உண்டு. குழந்தையைக் கோந்தை என்பர். தாழ்ப்பாளைத் தாப்பாள் என்பர். தொழும்பனைத் தொம்பன் என்பர். எழுந்திரு என்பதை ஏந்திரு என்பர். சிறப்பெழுத்தாகிய ழகரம், பல தெலுங்குச் சொற்களில் டகரமாக மாறியிருக்கின்றது. ஏழு என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/97&oldid=878614" இலிருந்து மீள்விக்கப்பட்டது