பக்கம்:தமிழ் விருந்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் விருந்து ஏடு, கோழி என்பது கோடி மேழி என்பது மேடி, பவழம் என்பது பவடம். இவ்வாறே இன்னும் பல. வல்லின றகரம் இரட்டித்து வரும் சொற்களிலும் பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒற்றுமை உண்டு. குற்றம் சாற்றினான் என்பதைக் குற்றம் சாட்டினான் என்கிறோம். ஒற்றுக் கேட்டான் என்பதை ஒட்டுக் கேட்டான் என்கிறோம். கழற்று என்பது கழட்டு என்றும், சுழற்று என்பது கழட்டு என்றும் வழங்கக் காண்கிறோம். இவ்வாறே தெலுங்கிலும் றகரம் டகரமாகின்றது. கொற்று என்பது கொட்டு என்றும், சுற்றம் என்பது கட்டமு என்றும், புற்று என்பது புட்ட என்றும், ஊற்று என்பது ஊட்ட என்றும், மாற்றம் என்பது மாட்ட என்றும் வழங்குகின்றன. ஆகவே, தமிழும் தெலுங்கும் வேறு மொழிகளாகக் காணப்படினும் அவற்றுள் அடிப்படையான ஒற்றுமையுண்டு என்பது இதுகாறும் கூறியவற்றால் ஒருவாறு விளங்கும். 13. தமிழ் மொழியும் பிற மொழியும்மலையாளம் மலையாள தேசம் முற்காலத்தில் சேரநாடு என்று பெயர் பெற்றிருந்தது. சேரநாடு தமிழ் நாட்டின் ஒர் அங்கமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர் மூவரும் தமிழ் மன்னராகவே திகழ்ந்தார்கள். சேர நாட்டு மன்னருட் சிலர் செந்தமிழ் நூல்கள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். ஆகவே, ஆதியில் சேரநாடு தமிழ் மணக்கும் திருநாடாக விளங்கிற் றென்பதில் யாதும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/98&oldid=878615" இலிருந்து மீள்விக்கப்பட்டது