பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை - 99

தலைவன் ஒl இந்தத் தளிரை நன்ருக அறிந்திருக்

கிருயேl சொன்னவையே இவை, -

(இப்படி அவன் பரிகாசமாகச் சொன்னன்.)

காதற் பரத்தை என்ன சொன்ன இலும் உன்மை உண்மை தான். இப்போது மிகவும் நல்லவனப்போல : பணிந்து கான் சிக்கிருய் ஆல்ை உன்னுடைய பழைய பண்பாகிய அன்பு ஒசிந்து (முறிந்து) விட்டது. முன்பெல்லாம் : தளிர் கொண்டு வந்து கொடுத்தபோது அது எப்படி இருந்த தென்பது எனக்குத் தெரியாதா? உன் அன்பு தங்ககோ அப்படி வளப்பமாக இருந்தது. அப்போதெல்லாம் தளிரைக் கொய்தவுடனே எனக்குக் கொண்டு வந்து கொடுத்தமையால் அது துவளாமல் இருக்கும். இப்போதோ இது துவண்டிருக்கிறது; நீயே பார். யாருக்காகவோ இதைக் கொய்து கொண்டு சென்ருய், அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அதை இங்கே கொண்டு வந்திருக்கிருய். அங்கும் இங்கும் அலங்ககல்ை இது துவண்டு போயிற்று. உன் திருட்டுத் தனம் இப்போது எனக்கு வெளிப்பட்டுவிட்டது. ஆ ஆ! எத்தனே அன்புடனும் ஊக்கத்துடனும் இதைக் கொய் திருக்கிருய் உன் மார்பிலே கிடக்கும் மாலே கூட வாடிவிட்டகே அப்படி வாடும்படி கொய்தது தெரிங் தும் அவள் உனக்கு உடம்படவில்லையோ? மிகவும் வருந்திக் கொய்க தழையைக் கையிலே எடுத்துச் சென்று அவளிடம் பல்லேக் காட்டிப் பரக்க விழித்துச் செய்யா ததை யெல்லாம் செய்தாயே; அதற்குக்கூடவா அவள் மனம் இரங்கவில்லே? நீ கெஞ்சிக் கூத்தாடியது கண்டும் அவள் சம்மதிக்கவில்லையா?

விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்." " தளிர் அறிந்தாய் தாம் இவை."