பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 D தமிழ் வையை

அருவிகளில் நீர் மிக வருவதையும் அது நிலத்திற் படர்ந்து ஆற்றிலே கலப்பதையும் சொல்திருர், பிற்காலத்துக் கள்வியங்களில் முதலில் மழை பெய்தலையும் ஆறு பெருகுவ தையும் அதனால் நாடு வளம் பெறுதலேயும் புலவர் சொல்லும் மரபு இங்கே நினைவுக்கு வருகின்றது.

வையையில் வெள்ளம் வருகிறது. அதைக் கண்டு காவலர்கள் அதன் கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டுப் பறையறைகின்றனர். மதுரைமா நகரில்_உள்ளவர்கள் நீர் விளையாட்டுக்கள்கப் புறப்படுகின்றனர். இப் பாட்டின் முதற் பகுதி வையையில் நடைபெறும் நீர் விளையாட்டை வருணிக் கிறது. ஆடவரும் மகளிரும் நீரில் விளையாடும் பொருட்டுக் கூட்டமாகப் போவதும், நீர் விளையாட்டு நிகழ்த்துவதும், அவர்கள் விளையாடுவதால் நீர் தன் இயல்பு மாறி வேறு மணத்தை வீசுவதும் பாட்டில் வருகின்றன.

பாட்டின் பிற்பகுதியில் காதற்பரத்தைக்கும் தலைவனுக் கும் இடையே நிகழும் வாக்குவாதத்தையும், அப்பால் அவள் ஊடல் தீர்ந்து அவளுேடு மகிழ்வதையும், தலைவி எல்லாச் செய்திகளையும் விறலியிடம் கூறுவதையும் புலவர் சொல்கிரு.ர். -

இந்தப் பாட்டிலிருந்து, அக் காலத்தில் மக்கள் இன்ப வாழ்வு பெற்று வாழ்ந்த வதையும் நாகரிக நலம்_சிறந்து விளங்கிய சிறப்பும் வேறு செய்திகளும் தெரிய வருகின்றன.

ஆற்றில் வெள்ளம் வந்தால் அதற்குத் தாபதீபம் காட்டிப் பூசை செய்து நிவேதனம் செய்வது பழைய தமிழர் வழக்கம். இறைவன் எழுந்தருளியிருக்கும் தலத்தைச் சுட்டி ஆணையிடுவர். இந்தப் பாட்டில் தலைவன் திருப்பர்ங்குன்றத் தின்மேல் இரண்டு முறை ஆணையிடுகிருன் ,

நீராடுவதற்கென்றே தனிப்பட்ட ஆடைகளையும் பிற அலங்காரங்களையும் ஆடவரும் மகளிரும் அக்காலத்தில் புனைந்தார்கள். இதை ஈரணி என்று புலவர் குறிப்பிடுகிருர். தோள்வளை, மணிமாலை முதலியவற்றை மக்கள் அன்னிந் தனர். ஆடவர் மார்பில் அணிந்த மாலையைத் தார் என்றும், மகளிர் அணிந்ததைக் கோதை யென்றும் சொல்வர். மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதி, நகத்திலும்