பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 11

கன்னத்திலும் செந்நிறம் ஊட்டி, மார்பில் சந்தனம் பூசி அழகு செய்து கொண்டனர் மகளிர்.

நீர் விளையாட்டு நிகழ்த்தும்போது நெட்டியாலான தெப்பத்தை மிதக்க விட்டு விளையாடினர்கள். நிறம் ஊட்டிய நெட்டியால் தேரைப் போலச் செய்து அதனை நீரில் விட்டு விளையாடினர். தாம் அணிந்த சாயமும் சந்தனமும் அழியவும், அணிகள் ஒன்ருேடொன்று கலக்கவும் ஆடவரும் மகளிரும் நீராடி இன்புற்றனர். ஒருவர்மேல் ஒருவர் மண நீரையும், புனுகையும் வீசி விளையாடினர். இதற்காகத் துருத்திகளையும் கொம்பையும் கொண்டு போளுர்கள். நீர் வீசு கருவியைச் சிவிறி என்று வழங்கினர்.

நீரில் விளையாடும் நகர மாந்தரோடு சேர்ந்து நீரில் இறங்கி விளையாடும் உரிமை சிலருக்கு இல்லாமல் இருந்தது. கரையிலிருந்தே பலர் நீர் விளையாட்டைக் கண்டு களித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் அருவி தாலாட்டவும் காற்றுப் பாராட்டவும் இரவிலே காதலர் தங்கி இன்புற்றனர். புலவர் . கள் அருவியையும் ஆற்றையும் பாடினர்கள். வையை தமிழ்ப் பாடலாற் சிறப்படைந்தமையால் அதனைத் தமிழ் வையை என்று பாராட்டுகிருர் நல்லந்துவர்ை.

"பல காலமாகக் குற்றமற்ற புலவர்கள் பாடிய பாட்டுப் பொய்யாகாமல் மழைநீர் வெள்ளமாக மலை அடிவாரத்தில் பரந்து ஓடியது' என்று புலவர்களுடைய திருவாக்கின் பெருமையை ஓரிடத்தில் நினைவூட்டுகிருர் ஆசிரியர்; <

" மாசில் பனுவற் புலவர் புகழ்புல

காவிற் புனைந்த கன் கவிதை மாருமை மேவிப் பரந்து விரைந்து வினை கந்தத் தாயிற்றே தண்ணம் புனல்.”

வையையாறு அணையை உடைத்துக் கொண்டு பாய்ந் ததாம். அதற்கு உவமை கூற வருகிருர் புலவர். வெள்ளத் தைக் கண்ட காதலர்களுடைய ஆசை எப்படிக் கட்டுக்கு