பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ் வையை

அடங்காமல் மீறுமோ அப்படி அணையை உடைத்தது என்று இடத்திற்கு ஏற்றபடி உவமை கூறி விளக்குகிருர்,

விருப்பொன்று பட்டவர் உளம் கிறை உடைத்தென வரைச்சிறை உடைத்ததை வையை.'

தலைவனிடம் ஊடல் கொண்ட காதற் பரத்தை அவன் இற்பரத்தையோடு நீராடினன் என்று சொல்லும்போது இப்படியே இடத்துக்கு ஏற்ற உவமை ஒன்று வருகிறது. "ஓடுகின்ற ஆற்றில் செல்லும் தெப்பக் கட்டையைப் போல ய்ார் யார் கைப்பற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர் களோ அவர்களுக்கெல்லாம் தெப்பமாக உதவும் மார்பை உடையாய் நீ என்று காதற்பரத்தை சொல்கிருள்;

' செல் யாற்றுத் தீம்புனலிற் செல்மரம் போல வவ்வுவல்லார் புனை ஆகிய மார்பினே.”

இப்படியே, "வையையில் உடைந்த மடையை அடைத்து விட்ட பிறகும் பின்னும் வரும் ஊற்று நீரைப் போல, முன்பு அவர்கள் பட்ட துன்பம் போகும்படி அவர்களோடு நீராடிய பிறகும் மறுபடியும் அவர்கள் வருந்தும்படி நீ இங்கே ஏன் வந்தாய்?" என்று அவள் சொல்வதிலும் இத்தகைய உவமை அமைந்திருக்கிறது;

    • 60)6)] 60) [L! உடைந்த மடை அடைத்தக்கண்ணும்

பின்னும் மலிரும் பிசிர்போல இன்னும்

அனற்றினை துன்பு அவிய நீ அடைந்தக்கண்ணும் பனித்துப் பணி வாரும் கண்ணவர் கெஞ்சம் கனற்றுபு காத்தி வரவு.' தலைவி தலைவன் நிகழ்த்தியவற்றைச் சொல்லிவிட்டுக் கடைசியில் வேகமாகப் பேச்சை முடிக்கிருள். அந்த வேகம் அவளுடைய பேச்சிலே ஒலிக்கிறது;

களிப்பர், குளிப்பர். காமம் கொடிவிட அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப.”

ஒரடியில் முதலெழுத்தையன்றி மற்ற எழுத்துக்கள் பல ஒரே மாதிரி வ்ந்தால் பாட்டில் எதுகை நயம் நன்ருக