பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழ் வையை

க்க தமிழ் ல் மேற்கோள்களாலும் வேதம் உபநிடதம் 'tந்தி: கருத்துக்களாலும் விளக்கியும் மிக விரிவாக அமைந்துள்ளது' என்று மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிரு.ர்கள். இப் புத்தகத்தில் உள்ள இரண்டு பாடல்களின் விளக்கங்களும் பரிமேலழகர் உரை ன் யப் பின்பற்றியே இருக்கும். சில: இடங்களில் மாத்திரம் வேறுபட்டிருக்கும். -

ஓரிரண்டு இடங்களில் மூலத்தில் ஊகித்துக்கொண்ட பாடங்களை அமைத்திருக்கிறேன். அவை வருமாறு;

வையையைப் பற்றிய பாட்டில் 15-ஆம் அடி, 'கொடி சேராத் திருக்கோவை காழ்கொள' என்ற பாடத்தோடு இருப்பதை, "கொடி சோரத் திருக்கோவை காழ்கொள” என்று கொண்டிருக்கிறேன். ஊரூர்பு இடந்திரீஇ' (37) என்பதை உரைக்கு ஏற்ப, 'ஊர்பூர்பு இடந்திரீஇ" என்று மாற்றிக்தொண்டேன். "வரையிழி விர்லருவி (?) வாதா லாட்ட” (52) என்று தெளிவின்றியிருந்த அடியை, "வரை யழி வாலருவிக் கால்தாலாட்ட' என்று ஒருவாறு ஊகித்து அமைத்திருக்கிறேன். "இன்னிள வேனி லிதுவன்ருே வையை நின்......” (77) என்ற அடியிலுள்ள குறையை உரையின் உதவியைக் கொண்டு, இன்னிள வ்ேனி லிதுவன்ருே வையைநின் காமம்' என நிரப்பி அமைத்திருக்கிறேன். அவ்விடங்களில் இப்படித்தான் பாடம் இருக்க வேண்டும் என்று துணிவாகச் சொல்லும் தகுதி எனக்கில்லை. ஆயினும் பாட்டின் ஓட்டத்தோடு இந்த ஊகங்கள் பொருந்தி இழை கின்றன என்ற நினைவுமாத்திரம் உண்டு. #

எட்டுத் தொகை நூல்களில் உள்ள பாடல்களில் சில வற்றைத் தேர்ந்தெடுத்து விளக்கம் எழுதி வெளியிடத் தொட்ங்கியபோது எட்டுப் புத்தகங்களும் நிறைவேற வேண்டுமே என்ற அச்சம் எனக்கு இருந்தது. எட்டு மாத காலத்தில் மாதம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற திட்டத்தோடு இதைத் தொடங்கினேன். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மை என்னிடம் இல்லாமை யால், வரையறுத்த கால அளவு இரட்டிப்பாகி விட்டது. . 1951-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இவ் வெளியீட்டு வரிசை பதினறு மாதங்கள் கடந்த பின்பு இப்போது நிறை வேறுகிறது. தாமதமானலும் எடுத்துக் கொண்ட காரியம்