பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 15,

ஒருவாறு நிறைவுறும் வண்ணம் செய்வித்த முருகன் திரு வருளே எண்ணி உருகி வணங்குகின்றேன்.

சங்கநூற் கடல் எங்கே, நான் எங்கே? பரந்த பெருங் கடற்கரையில் கிளிஞ்சில் பொறுக்கும் குழந்தையைப்போல இவற்றை எழுதினேன். இதற்குக்கூட என்னுடைய அறிவாற் றல் காரணம் என்று சொல்ல முடியாது. என்னுடைய ஆசிரியப்பிரானுகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர், கிளுடைய கருணைப் பெருக்கிலே ஊறியமையால் அடைந்த ப்ேறு இது என்பதை எத்தனே முறை சொன்னலும் போதாது. . .

சங்கநூற் காட்சிகளாகிய இந்த நூல் வரிசையை நன்ருக வெளியிட வேண்டும் என்ற ஆவலும் அதற்கேற்ற முயற்சியும் செயல் வன்மையும் காட்டி இவற்றை அழகாக மலர்ச் செய்த பெருமை அமுத கிலேயத்தின் தலைவரும் என் கெழுதகை நண்பருமாகிய 器 புரீ ரீகண்டன் அவர்களைச் 露 அவருக்கு என் நன்றியறிவைத தெரிவித்துக் கொள்

றன.

'மன விளக்கு வெளியானது தொடங்கி ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து, "இது புது முறை; நல்ல முறை: அழகாக இருக்கிறது” என்று பாராட்டிய அன்பர்கள் பலர். பத்திரிகையாளர் இந்தப் புத்தகங்களைச் சிறப்பித்து மதிப்புரை எழுதினர். இத்தகைய அன்பர்கள் அளித்த ஊக்கம் என் கருத்துக்கும் பேளுவுக்கும் உரத்தை அளித்தன. அவர்களுக்கெல்லாம் என் நன்றி உரியது.

ந்தப் புத்தகங்கள் எட்டுக்கும் மூன்று வண்ணத்தில் வ.கிர் ஒவியங்களை எழுதி உதவியவர் பூ எஸ். ராஜம் அவர்கள். இந்திய ஓவியக் கலையில் இவர் மிக்க திறமை உள்ளவர் என்பதைத் தமிழ் நாட்டார் நன்கு அறிவர். இந்தப் புத்தகங்களின் அழ்கை இவருடைய ஒவியங்கள் பின்னும் அதிகமாக்கி யிருப்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ஒவியர் மணி ராஜத்தின் கைவண்ணத்தைப் பாராட்டி என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ்! 11-3-1953 கி.வா. ஜகந்நாதன்