பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ்

இறைவனுடைய பெருங்கருணையையும் பேராற்றலே யும் கினேக்கும்பொழுது அன்பர்களுடைய உள்ளம் களிக் கூத்காடுகிறது. ஒவ்வொரு கணமும் அவனுடைய திருவருளின் சிறப்பை உணர்ந்தபடியே வாழ்கிறவர்கள் அவர்கள். உடம்பையும் உடம்பின் உறுப்புக்களையும் உயிர்கள் வாழும் உலகையும் அவ்வுலகத்துட் பொருள்களே யும் படைத்து உயிர்களுக்கு உதவிய கடவுளின் பேருதவியை கினேக்குந்தோறும் அவ்வன்பர்களுக்கு நன்றியறிவு மீதுர்கின்றது. அவனே வாயாரப் பாடு கின்றனர்; அவன் புகழை விரிக்கின்றனர்.

புகழ் கூறுவார்

அவன் புகழ் அவர்கள் கூறக் கூற மேலும் மேலும் விரிகின்றது. அதற்கு எல்லே ஒன்று இருப்பதாகவே தோன்றவில்லை. வேதங்கள் பல பல விதமாக இறைவன் புகழை விரித்தும் இன்னும் முடிவு காணவில்லை. அப்படி யிருக்க, மக்கள் எவ்வாறு புகழ்ந்து முடிவு கட்டி விட முடியும்? அதல்ை புகழாமல் இருக்க முடியுமா? தம்மால் இயன்ற வரையில் புகழ்ந்துகொண்டே இருக்கிருர்கள்.

த, வை-2 -