பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 19

போகின்றது. கலக்கம், தெளிவு என்பவற்றையே அறியாமை, அறிவு என்று சொல்லலாம். அவற்றையே இருள், ஒளி என்றும் சொல்லலாம். பொறிகளே மயக்கி அறியாமைக்கு உட்படுத்துவகளுல் உலகத்தை, 'மாயிருள் ஞாலம்', 'இருள் கருமா ஞாலம்' என்று ஆன்றேர் கூறுவர். அந்த மயக்கம் ங்ேகில்ை ஒளியாகிய மெய்ஞ் ஞானம் உண்.ாகும்.

ஐம்பொறிகளினுல் உண்டாகும் இருள் நீங்க இறைவன் 1ால் இடைவிடாத அன்பு பூண்டு, மெல்ல மெல்லப் பொறிகளின் செயலே அடக்க வேண்டும். அவ்வாறு ஐம்பொறியில்ை விளையும் இருள் ங்ேகின பின் பழைய வாசனையில்ை உள்ளத்தே இருக்கும் மாசைக் களயவேண்டும். அந்த மாசைக் களைவதற்கு ஆன்ருேர்கள் அருளாலும் அதுபவத்தாலும் தெளிந்து வழி வகுத்திருக்கின்றனர். மைத்திரி, கருணே, முதிதை, உபேrை என்ற நான்கு பாவனைகளால் மனமாசைத் துடைக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது மைத்திரி பாவனே. பிற உயிர்கள் துன் புறும்போது அதற்கு இரங்கி அத்துன்பம் ங்ேக வேண்டு மென் று கினைப்பது கருண பாவனே காம் பண்ணிய கல் வினேப் பயனே நுகர்ந்த உயிர்கள் மகிழ்ச்சியை அடைவது கண்டு மகிழ்,கல் முதி.க பாவனே. விருப்பு, வெறுப்பு, பகை, நட்பு இன்றி எவ்வுயிரையும் சமமாகப் பாவிக்கல் உபேrா பாவனே; இதை இகழ்ச்சி யென்றும் சொல்வர். இந்த கான்கும் சிக்கத்தின்கண் உள்ள மாசைக் துடைத்துத் தூய்மைப் படுத்துவதால் இவற்றைச் சித்த பரிகர்மம் என்று சொல்வார்கள்.

ஐம் பொறிகளால் விளையும் மயக்கமாகிய இருளை நீக்கி மைத்திரி முதலிய நான்கு பாவனேகளால் உள்ளத்திலுள்ள