பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ் வையை

கிளப்ப - சொல்ல. சங்கு ஊங்கு திற் கிளப்ப, நகுதலும் தகுதி என்று இயைத்துப் பொருள் செய்யவேண்டும்.

அப்புகழ்க ளெல்லாம் நினக்கு இயல்பாவன அல்லது வியக்கப்படுவன அல்லாமையை அறிந்து வைத்தும், அத் தன்மையம் அல்லாத யாங்கள், அவற்றுட் சிலவற்றை ஈங்கும் உணங்குமாகப் பிறழக் கூறுவதற்கு நீ நகுதலும் எமக்கு ஒரு தகுதியாம்; அதனுல் யாம் கிளத்தலும் ஒழிதற் பாற்றன்று’ என்பது பரிமேலழகர் உரை..மு.

இவ்வாறு கடுவன் இள எயினனர் அவையடக்கத்தைப்

போன்ற முகவுரையைக் கூறிவிட்டு மேலே திருமாலை. புகழ்வதில் ஈடுபடுகிறர். அப்பெருமானுடைய திருமேனிக் கோலத்தையும் ஆடை ப.ை ஆகியவற்றையும் வருணிக் கிரு.ர்.

திருமேனி

திருமால் பெரிய திருமேனியை உடையவர்; கரிய மேனியர். அந்தத் திருமேனிக்கு எதை உவமை சொல்லலாம்? ஒளிவிடும் அழகிய லே மணியைப் போல எம்பெருமான் திருமேனி ஒளிர்கிறது. ஆதலின் லே மணியைச் சொல்லலாம். அவனுடைய பெரிய திருமேனிக்கு ஏற்றபடி பெரிய பொருளே உவமையாகச் சொன்னல் பொருத்தமாக இருக்கும், எல்லே யற்ற பொருள் ஒன்று இருந்தால் அதைச் சொல்லலாம். கரை யற்ற பொருளாக இருப்பது எது? கடல் இருக்கிறதே, கரிய நிறத்தை உடைய கடலே அவன் திருமேனிக்கு உவமை யாகச் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆனல்