பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ் வையை

0 அழகிய நீல மணி, அலே உண்டாதல் அடங்கிய கடல், காலத்தில் பெய்ய வருகிற பெரிய நீராகிய கருப்பத்தை யுடைய மேகம் ஆகிய மூன்றையும் ஒக்கும். நின் கரிய பெரிய திருமேனி. -

திரு - அழகு. பாடு - படுதல் உண்டாதல் : ஒலித்தலும் ஆம். அவிந்த-அடங்கிய-முந்நீர்-மூன்று நீர்மையை யுடைய கடல்; ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று இயல்பு களை உடையது; ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்று நீர்களே உடையது என்றும் சிலர் கூறுவர். -

வரும் காலத்திலே பெய்ய வரும். இருஞ் சூல் மழை என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும், புரையும் . ஒக்கும். மா - பெரிய, கரிய. 0

உடையும் படையும்

திருமேனியின் லே வண்ணம் இயற்கையாகவே ஒளிர் கிறது. அதனைப் பின்னும் கன்ரு கப் பொலி வுறுத்தும்படி அப் பெருமான் இடையில் அணிந்த பொன்னடை அமைந்திருக்கிறது. லே வண்ணமும் பொன்னிறமும் ஒன்றற்கு ஒன்று மாறுபட்டவை; ஒன்றை யொன்று எடுத்துக் காட்டுபவை.

மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை.

0 அந்தக் கரிய திருமேனியோடு நிறத்தால் மாறுபட்ட பொன்னடையை உடையாய்,

முரணிய-மாறுபட்ட உடுக்கை-உடை, 9

கரிய மேனியையும் பொன்னடையையும் கண்ட பிறகு சற்றுக் கூர்ந்து எம்பெருமானே நோக்க விருப்பம் உண்டா கிறது. பளபளக்கும் ஆடையைக் கண்ட கண்ணுேடு பார்க்