பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 27

கையில் அப்பெருமானுடைய திருக் கரத்தில் எகோ ஒன்று பளபளப்பது தெரிகிறது. அது மின்னுகிறது; சுழல்கிறது. அது என்ன? இறைவன் சக்கரத் திருக்கையினன் என்று கேட்டிருக்கிருேமே. ஆம். அவன் திருக்கரத்தில் ஒளி விடு கின்ற சக்கரம் இருக்கிறது. அந்தச் சக்கரம் எத்தனையோ அசுரர்களுடைய உயிரைக் குடித்திருக்கிறது. பகைவர் களின் உயிரைக் கண்டால் அந்தச் சக்கரம் துள்ளு கிறது. அவர்களின் உயிருக்கு அது பகையானது; அவர்கள் உயிரோடு முரணை உடையது. ாோளுர் உயிரொடு முரணிய கேமியை

ைபகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரா யுதத்தை உடையாய்.

தோளுர்-பகைவர் பொருதவர் என்பது சொற்பொருள்: ஒருவருடைய புகழையும் செல்வத்தையும் கண்டு பொரு மல் பகைத்தலின் பகைவருக்கு நோனர் என்ற பெயர் வந்தது. முரணிய-பகைத்த, நேமி-சக்கரம்; நேமியை-சக்க ரத்தை உடையாய். 0 -

நரசிங்கப் பெருமான்

திருமாலின் சக்கரப் படையின் வலியை நினேந்த போது புலவருக்கு அப்பெருமானுடைய திருஅவதாரங்கள் நினைவுக்கு வருகின்றன. பிற படை இல்லாமல் தன்னு டைய நகங்களே படையாக இரணியனுடைய உடலே வகிர்ந்த செய்தியை எண்ணுகிருர், நரசிங்க அவதாரக் திலே கருத்தைச் செலுத்துகிருர், *

'திருமாலே, செங்கண்ணே உடைய பெருமானே, சினத் கால் சிவப்பேறுதலின்றி இயல்பாகவே சிவந்த திருவிழிகளே உடையவனே, t இரணியனைப் பிளந்த உகிரை உடையாய்" என்று பாராட்ட வருகிரு.ர்.