பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தழிழ் வையை

துன்பம். கூம்புதல் அடங்குதல். கூம்பு தற்குக் காரண மாகிய நடுக்கம். 14. அவர்ந்த பரவிய, நோய் கூர் புகழோன், நடுக்கத்துப் புகழோன் என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். 14-15 இகழ்வோன் தாதையாகலின் அவனே இகழாத நெஞ்சினகுகை. "இகழப்படுவோனே இகழாத நெஞ்சினனுக’ என்பர் பரிமேலழகர். இகழா இகழ்ந்து; அவன் வலிமை முதலியவற்றை மதியாமல் என்றபடி..

16. நட்ட - விரும்பிய அன்பு செய்த முயங்கி தழுவி. மார்பு முயங்கி’ என்பதற்கு, அவன் நெஞ்சிற் பொருந்தி’ என்று உரை எழுதுவர் பரிமேலழகர். 17. ஒன்ரு நட்ட அவன் தன் நாட்டிற் பிற பெயர் உலவாமல் தன் பெயர் ஒன்றே ஆகும்படி நிறுவிய இரணியன் நின்ளுேடு ஒன்ருக வரங்கொண்ட இரணியன்' என்பர் பரிமேலழகர். உறு-மிக்க.

18. படி - பகை: பிாதி என்பதன் சிதைவு. படியென் பது பாகதச் சிதைவு (பரிமேலழகர் உரை.) மதம் - செருக்கு, சாம்ப . அழிய, ஒதுங்கி - பாய்ந்து. 19. இன்னர் . துன்பத் தைக் காட்டும் தீய நிமித்தங்கள். 20. வெடிபடா ஒடி - வெடி பட்டுப் பிளந்த, துண் தடி - தானின் துண்டங்கள். 21. தடி தடி - தடிந்த மாமிசம், தடிதல் - இங்கே பிளத்தல். வகிர் . வகிர்தல்; பிளத்தல். உகிரினே நகத்தை உடையாய். "ஒரு காலத்தே இரண்டு தடியும் வீழ்ந்தனவென விரைவு கூறிய வாறு’ என்பர் பரிமேலழகர். ம

வராக அவதாரம்

இறைவனுடைய திருவவதாரங்களில் ஒன்ருகிய நரசிங்க . மூர்த்தியை கினேந்தபின், தொடர்ந்து மற்ருேர் அவதாரம் நினைவுக்கு வருகிறது. உலகம் முழுவதையும் பாயாகச் சுருட்டிக் கடலில் மறைந்தான், ஒர் அசுரன். திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக்