பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 33

கொன்று உலகத்தைக் கடலினின்றும் மேலே எடுக் தான். அந்த அவதாரம் புலவர் கினேவுக்கு வந்தது அந்த வரலாறு நரசிங்கமூர்த்தியின் கதையைவிடப் பழமையானது; பூர்வ காலத்தில் நிகழ்ந்தது.

பழங்காலத்தில் இவ்வுலகத்தை வராகத் திரு வுருவங் கொண்டு தன் கழுத்தால் தாங்கி எடுத்தான் இறைவன். உலகத்தைக் காங்கும் வலிமை அக் கழுத்துக்கு உண்டு. கரிய வலிய கக்கரத்தால் இவ்வுலகத்தை எடுத்துக் தாங்கித் தன் அருளாட்சியின் கீழே வைத்தது புராணத்தால் பாராட்டப்பெறும் செய்தி. உலகத்தை மீட்டு அதை உரிய கிலேயில் வைத்துவிட்டு அதன் மேலே இறை வன் உவகையினுல் கிமிர்ந்து கின்றன். அப்படி கின்றது உலகத்துக்கு ஈடுவே அச்சுப்போலே மேருமலை கிமிர்ந்து சிற்பது போல இருந்தது. உலகத்தின் நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்றிளுேடு ஒத்த வராக மூர்த்தியை கினேந்து பாடுகிருர் புலவர்.

புருவத்துக் கரு வல் கந்தத்தால் தாங்கி இவ் வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்றிளுேடு ஒக்கும்.

e பண்டைக் காலத்தில் (வராகத் திருக்கோலம் கொண்டு) கரிய வலிய கழுத்தினுல் இவ்வுலகத்தைத்தாங்கித் தன் அடிக்கீழ் வைத்தது, (உலகத்தின்) நடுவில் ஓங்கிய பலரும் புகழும் மேருமலையை ஒக்கும்,

புருவம்-பூர்வம், பழங்காலம். கந்தம்: கந்தரம் என்பதன் சிதைவு போலும். தாங்கி-எடுத்துப் பாதுகாத்து. அடிப்படுத்தது.தன் அருளானைக்குள் வைத்த செயல்; எழுவாய். ஐ: சாரியை. நடுவண்-நடுவில். பலர் புகழ் குன்று. மேருமலை, 0 X

த.வை.3