பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழ் வையை

வெம்மையும் தண்மையும்

கடவுள் எல்லாப் பூதங்களையும் உண்டாக்கின்ை. கதிரவனையும் திங்களையும் படைத்தான். அவற்றின் தன்மைகளேயும் அவனே உண்டாக்கினன், அந்த அந்தப் பொருளாகவே இருந்து உலகத்துக்கு நன்மை உண்டாக்குகிருன். அவன் இருளே ஒட்டும் தெய்வத்தேசு படைத்தவன்; சோதி உருவுடையவன். அவன் திருவுருவக் தைக் கண்டவர்களே அவனுடைய விளக்கத்தை உணர முடியும் என்பது இல்லை. அவனுடைய ஒளியின் ஒரு கூற்றைக் கதிரவனிடத்தில் பார்க்கலாம். அவன் தன் ஒளியில்ை கதிரவனே ஒளியுடையவனுகச் செய்கிருன், அப்படியே அடியார்களுக்கு இன்னல் புரிவோர்களை அடக்கும் வெப்பம் அப்பெருமானிடத்தில் உண்டு. அந்த வெம்மையின் ஒரு கூறே பணியைப் போக்கும் வெம்மை யாக ஞாயிற்றினிடம் அமைந்திருக்கிறது. ஆதலின் சூரியனைப் பார்க்கும்போதே திருமாலின் கி&னவு வர இடம் உண்டு அப்பெருமானுடைய வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின்கண்ணே உள என்று எண்ணி வணங்கலாம்.

திங்கள் தண் சுடர். அதன் கிலவில் கண்ணிய ஒளியும் மென்மையும் இணங்கிருக்கின்றன. உலகம் தண்ணிய நிலவை ஏற்று உவக்கிறது. காதலர் அத்னக் கண்டு களிக்கின்றனர். குழந்தைகள் நிலா விளையாட்டு விளையாடுகின்றனர். முள்ளும் மரமும், மேடும் பள்ளமும், கறுப்பும் செம்மையும் கதிரவன் ஒளியில் வெவ்வேருகத் தோன்றுகின்றன. பாலே கிலம் அவ்வொளியில்ை கண்ணேத் துன்புறுத்துகிறது. ஆனால் நிலவொளியில் பாலை நிலங்கூட மோகனமான சோபையைப் பெறுகிறது. கரடு முரடான வழிகளும் பார்க்க அழகான தோற்றத்தைப் பெறுகின்றன. இதுதான்