பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 35

நிலவின் மென்மை. அது பட்ட இடங்களெல்லாம், பார்க்க அழகிய கோற்றத்தை அடைகின்றன. இறைவன் தண்மைக்கும் மென்மைக்கும் இருப்பிடம். அவனுடைய திருவருளேக் காட்டிலும் தண்ணிய பொருள் ஒன்று இல்லை. அதைக் கண்ணளி என்று புலவரும் அன்பரும் பாராட்டுவர். அவனுடைய கண்மையையும் மென்மையையும் ஓரளவு திங்களிலே காணலாம்.

|கின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; கின், தண்மையும் சாயலும் திங்கள் உள.

0 நின்னுடைய (பகைவரை அழிப்பதற்குக் காரண மான) வெப்பசமம், ஒளியும் சூரியனிடத்திலே இருக்கின்றன. நின்னுடைய குளிர்ச்சியும் மென்மையும் சந்திரனிடத்திலே இருக்கின்றன. *

வெம்மை-கொடுமை; தியோரைத் தெறும் தன்மை. ஞாயிறு-கதிரவன். தண்மை-குளிர்ச்சி, அருள். சாயல். மென்மை, வெம்மை தண்மை என்றது பகைவர் மாட்டு வெகுளுதலையும் அன்பர் மாட்டு அருளுதலையும்’ என்பது பரிமேலழகர் உரை. 6 : -

அசுரர்களைத் தடிக்க வெம்மையும் அன்பர்களைக் காக்கும் தண்மையும் அவனிடம் இருப்பதை நரசிங்க அவதாரமும், வராக அவதாரமும் காட்டுகின்றன. அந்த வெம்மையையும் கண்மையையும் உலகிலே கண்டால் அவை யாவும் இறைவனுடைய குணங்களி லிருந்து கூறுபட்டு வந்தன என்று எண்ணுவது அடி யார் இயல்பு. தியதைப் போக்க வெம்மையும் நல்லதை ஆக்கத் தண்மையும் வேண்டும். உலகில் கிமை போக, நன்மை வளர்ந்தால் இன்பம் உண்டாகும். இறைவன் தன் திருவருளால் எல்லா உயிர்களுக்கும் இன்பம் அருளுகிருன்; துன்பத்தையும் அருளுகிருன். அவ்விரண்டுமே உயிர்களின் புண்ணிய பாவங்களின்