பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் வையை

பயன்கள். தீமைக்குத் தீமையும் தன்மைக்கு நன்மையும் பயனக வருதலின் தீமை ஒழிந்து கன்மை மிகும். ஆதலின் இறைவன் வெம்மையும் தண்மையும் உடையவனுக இருக் கிருன். அவனுடைய வெம்மையையும் கண்மையையும் உணர வேணடுமானல் ஞாயிற்றையும் திங்களேயும் கண்டு. தெளியலாம். கதிரவனிடம் உள்ளது வெம்மையானுலும் அதல்ை விளைவது நன்மையே. இறைவனுடைய வெம் மையும் அத்தகையதே.

வண்மை

இறைவனக் காட்டிலும் சிறந்த வள்ளல் யாரும் இல்லை. தம்மிடம் உள்ள பொருள்களை வரையறை யின்றி ஈயும் வள்ளல்கள் பலர் உலகில் இருந்தார்கள்; இருக்கிருர் கள்; இனியும் இருப்பார்கள். ஆல்ை அந்த வள்ளல்களுக் குப் பொருளே உதவியவன் யார்? இறைவன் அல்லவா? ஆகவே, வள்ளல்களை வள்ளல்களாகும்படி செய்த பெரு வள்ளல் இறைவன். அவன் தராவிட்டால் யாரும் ஏதும் பெற இயலாது. வள்ளல்கள் தம்மிடம் உள்ள பொருளேக் கொடுத்தால், அவரிடம் உள்ள பொருள் அந்த அளவுக்குக் குறைந்துவிடும். மறுபடியும் பொருளே ஈட்டிக் கொண்டா லன்றி அக்குறை நீங்காது. கொடுக்கக் கொடுக்கக் குறை. யாத செல்வம் அருள் ஒன்றுதான். அந்தச் செல்வத்தை நிரம்ப உடையவன் இறைவன். அதனே அகாதிகாலமாக அவன் யாவருக்கும் வழங்கி வருகிமுன். அதனுல் அவனிடம் உள்ள அருள் எள்ளளவும் குறைபடவில்லை. அவன் சுரக் கும் அருள் தங்குதடையின்றி வருவது. அவனுடைய வள்ளன்மை வேறு யாரிடத்தும் காணக் கிடையாதது.

இந்த இயல்புகளை கினேப்பூட்டுவது மழை. காலத் துக்குக் காலம் மழை சுரந்துகொண்டே இருக்கிறது. இனி