பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 37

மேல் உலகத்தில் மழையே இல்லை என்று சொல்லும் கிலே எப்போதும் வராது. பசும்புல் முதல் மக்கள் வரையில் தலையெடுத்து வாழும்படி வைப்பது மழை. அது கம்மிட மிருந்து கைம்மாருக எதையும் எதிர்பார்ப்பதில்லை. இந்த இயல்பு மழைக்கு எங்கிருந்து வந்தது? இறைவனுடைய ஒரு கூமே மழையாக இருப்பதால் அவனுடைய சுரத்தலும் வண்மையும் மாரியினிடம் உள்ளன. அவனுடைய கூறு இல்லாவிட்டால் மழை இராது; மேகம் இருந்தாலும் அது பெய்யாது. இறைவனுடைய அருளாணேயால் மேகம் மழை பெய்கிறது. அது பெய்யும்போது அதனேக் காணும் அன்பர்கள், "இதோ இறைவன் திருவருள் மழையாகப் பெய்கிறது' என்று கூறி வாழ்த்துவார்கள். கின், சுரத்தலும் வண்மையும் மாரி உள. ைஉன்னுடைய இடையருது சுரக்கும் தன்மையும் கொடையும் மழையினிடம் உள்ளன.

"சுரத்தல் - கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தல். வண்மை - கொடை. (பரிமேலழகர்) e

காவலும் பொறையும்

கடவுள் எல்லா உயிர்களையும் தனு, கரணம், புவனம், போகம் என்பவற்றைக் கொடுத்து வாழச் செய்கிருன். தங்கள் தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே ஈட்டிக் கொண்டு வாழலாம் என்று எண்ணு வது தவறு. நம்முடைய முயற்சியால் நாம் பெறுவது மிகவும் சிறிதே. இறைவன் மறைமுகமாக நின்று நம் முயற்சிக்கு வெற்றி அருளுவதல்ைதான் அந்த முயற்சியும். பயனேத் தருகிறது. அரிசியை மனிதன் தன் முயற்சியால் வாங்கி வரலாம். அதைச் சமைக்கத் தி வேண்டும். அது