பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 39

அப்படி வாழ்வதில்லை. இது பிழை அல்லவா? ஆயினும் இறைவன் மைக்கு மேலும் மேலும் பொருளேத் தருகிருன்; காம் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்கிருன்.

உயிர்களைப் பாதுகாத்துப் புரத்தலும், அவர்கள் இயற் றும் பிழைகளைப் பொருட்படுத்தாது பொறுக்கும் நோன் மையும் இறைவனிடம் இருத்தலே, நம்மைத் தாங்கும் ஞாலம் ஒவ்வொரு கணமும் நமக்குப் புலப்படுத்து கிறது. .யிர்க்கூட்டம் வாழ்வதற்கு ஆதாரமாக கின்று, அவர்களுக்குரிய போகங்களைக் கரும் பொருள்

களைக் தன்னிடம் உண்டாக்கி உதவி செய் கிறது கிலம். நம்மைப் புரக்கும் தன்மை அதற்கு உண்டானது. இறைவன் திருவருளால். இறைவ

லுடைய கல்யாண குணங்களில் ஒன்ருகிய காவல அது ஒரு கூறு பெற்றிருக்கிறது.

பொறுமைக்கு நிலத்தைக் கூறுவது வழக்கம். "அகம் வாரைத் தாங்கும் கிலம்போலத் தன்னை, இகழ்வார்ப் பொறுத்தல் கலை' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன் உள்ளே புதைந்திருக்கும் கணிப்பொருள்களே அகழ்ந்து எடுப்பதோடு, வேளாண்மையின் பொருட்டு உழுதும், நீர் கிலேகளே அமைக்கும் பொருட்டுத் தோண்டியும், நடக் கும் பொருட்டுக் காலால் மிதித்தும் மக்கள் துன்புறுத் தினுலும் பூமிகேவி சினம் கொள்வதில்லை. அத்த கைய பொறுமை எங்கிருந்து வந்தது. கதிரவனிடம் தன் வெம்மையின் ஒரு கூற்றையும், திங்களினிடம் தன் தண்மையின் ஒரு பகுதியையும், மாரியினிடம் தன் வண்மை யின் ஒரளவையும் எந்தப் பெருமான் வழங்கிேைன அந்தப் பெருமானே ஞாலத்துக்கு இந்தப் பொறையை வழங் கின்ை. அவன் வழங்கியமையால் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உளவாயின.