பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ் வையை

கின், புரத்தலும் கோன்மையும் ஞாலத்து உள.

ைநின்னுடைய தாங்கும் தன்மையும் பொறுமையும் நிலத்தினிடம் இருக்கின்றன.

புரத்தல் -பாதுகாத்தல், நோன்மை - பொறுத்தல், ஞாலம் பூமி. 0

மணமும் வண்ணமும்

இறைவனுடைய திருமேனி நீல வண்ணத்தை உடையது. அதற்கு உரிய உவமைகளே முன்பு சொல்லி யிருக்கிருர் புலவர். மணியையும் அலேயடங்கின கடலையும் மேகத்தையும் சொன்னர் அல்லவா? அது அவன் திரு மேனியை கினைத்து அதற்கு எது உவமையாகும் என்று ஆராய்ந்து பார்த்துச் சொன்னது. இப்போது கதிரவனே யும் திங்களையும் மழையையும் ஞாலத்தையும் பார்த்து அவற்றிலே இறைவனுடைய கூறு இருக்கிறதென்று கண்டு இன்புற்ற அதிசயத்தை வெளியிட்டார்.

காயாம்பூவை அகக்கண்ணிலே காணுகிருர் புலவர். கதிரவனேக் கதிரவகைக் காணுமல் கடவுளின் வெம்மையை யும் விளக்கததையும் கொண்ட பொருளாகக் கண்டவர் இவர். கதிரவனைக் கண்டு உலகப் பொருளே யெல்லாம் அதன் ஒளியாற் காணலாம்; அன்றிக் கதிரவனயும் காண லாம். இந்த இரண்டுக்கும் புறக்கண் கருவியாக உதவும், இந்த இரண்டு காட்சியையும் யாரும் காணலாம். ஆனல் கதிரவனைக் கண்டு அவன் மூலம் இறைவனைக் காண்பது எல்லாராலும் இயலாது. இறைவனுடைய அன்பும் அவனு டைய திருவருளிலே நாட்டமும் உடையவர்களுக்கே அது இயலும். அந்த நாட்டத்தையுடைய புலவர் காயாம்பூவைக் காணுகிருர், -