பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 43;

தாலும் உணராவிட்டாலும் அவன் இருப்பது உண்மை, புழுக்கத்தினுல், “காற்று இல்லை' என்று சொன்னலும்

காற்று இருப்பதுபோல, அறியாமையால், ‘இறைவன்

இல்லை' என்று சொன்னலும் இறைவன் இல்லாமல்

போவதில்லை; இருக்கிருன். அவதார காலங்களில் வாழ் வாருக்கும் அன்புடையாருக்கும் வெளிப்பட்டு அருள் செய்ய வருகிருன்; ஏனையோருக்குத் தெரியாமல் ஒடுங்கி நிற்கிருன். இந்த இரண்டு இயல்புகளையும் காற்றினிடம்

பார்க்கலாம். அதனிடம் வருதலும் ஒடுக்கமும் உள. அவை: இறைவனுடைய இயல்புகளில் ஒரு கூறே ஆகும்.

30. கின், தோற்றமும் அகலமும் நீரின் உள:

கின், உருவமும் ஒலியும் ஆகாயத்து உள்: கின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள. 0 நின்னுடைய தோற்றமும் பரப்பும் நீரில் உள்ளன: நின்னுடைய உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன: நின் வருகையும் வாராமல் ஒடுங்கி நிற்றலும் காற்றில் உள்ளன.

தோற்றம் - காணப்படும் காட்சி ; வெளிப்படுதல்: என்பர் பரிமேலழகர். அகலம் . விரிவு, பெருமை’ (பரிமேலழகர்.) உருவம் - ஞானக்கண்ணுல் காணப்படும் உருவம். ஒலி சொல்; ஆகாயத்துள என்ருர், அதன் பண்பாகலின். வருதல் - அவதரித்தல். ஒடுக்கம்மீண்டு சென்று அடங்குதல்’ என்பர் பரிமேலழகர். மருத்துகாற்று. 0

எல்லாம்

இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டு போக

லாம். தீயின் தன்மையாகிய வெப்பம் இறைவனுடைய

இயல்பை கினைப்பூட்டுகிறது. மலேயின் உயர்வும் கடலின் ஆழமும் மரத்தின் பசுமையும் கல்லின் திண்மையும் மலரின்