பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 44 தமிழ் வையை

மென்மையும் பொன்னின் பொலிவும் இரும்பின் வன்மையும் இறைவன் இயல்புகளின் கூறுகளே. யானேயின் உயர்விலே அவன் உயர்வையும், சிங்கத்தின் வீரத்தில் அவன் வீரத்தை யும், மானின் மென்மையில் அவன் மென்மையையும், அணிலின் சுறுசுறுப்பிலே அவன் இயக்கத்தையும், மயிலின் அழகிலே அவன் அழகையும், குயிலின் குரலிலே அவன் குரலேயும், காக்கையின் சிறகிலே அவன் கருகிறத்தையும் காணலாம். சேற்றிலே நெகிழ்ச்சியும், முள்ளிலே முனையும், வாளிலே கூர்மையும் அவன் இயல்புகளின் அம்சமே. இப்படிப் பார்த்தால் உலகில் உள்ள பொருள்களின் தன்மைகள் யாவும் அவனுடைய தன்மைகளின் கூறுகளே. எல்லாம் அவனிடத்தில் உள்ள தன்மைகளிலிருந்து பிரிந்தவை. ஒடுங்கும்போது அத்தன்மைகள் அவனிடம் ஒடுங்குகின்றன.

புலவர் ஒவ்வொரு பொருளாக எண்ணி அவற்றின் தன்மைகளையும் கினைந்து, அவை இறைவனுடைய தன்மை களின் கூறுகள் என்ருர். கதிரவனேயும், திங்களையும், மாரியையும். ஞாலத்தையும். காயாம்பூவையும், ைேரயும், வானேயும், காற்றையும் கினைத்து அவற்றின் தன்மைகளே யும் கினேத்தார். இப்படி ஒவ்வொன்முகச் சொல்லிக் கொண்டே போனல் உலகில் உள்ள பொருள்கள் எல்லா வற்றையும் சொல்லலாமே! அப்படிச் சொல்வது என்பது முடிகிற காரியமா? ஆகையால் மேலே வேறு பொருள்களைச் சொல்லாமல், "இதுகாறும் கான் சொன்ன பொருள்களும், இவையல்லாமல் இவற்ருேடு தொடர்புடையனவாக கினேக்கத்தகும் பொருள்களும், மற்றவையும் ஆகிய எல்லாம் உன்னிடமிருந்து பிரிந்தவை; அதல்ை உன் தன்மைகளைப் பெற்றவை; காவலையுடைய உன்னல் பாதுகாக்கப் பெறுபவை. இவை மீட்டும் உன்னிடத்தே ஒடுங்குபவை' என்று சொல்லிவிடுகிருர்.