பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 45

இதுகாறும் சொன்னவற்றை இவை என்று சுட்டு கிருர். அப்படிச் சொன்னவற்முேடு தொடர்புடையன வற்றை உவை என்ற சுட்டால் சுட்டுகிருர். மற்றவற்றை யெல்லாம் அவை என்று கூறுகிருர். இவை, உவை, அவை என்ற மூன்று சுட்டுப் பெயர்களும் மூன்று கிலேயில் உள்ளவை. கமக்கு அருகில் உள்ளவற்றை இவை என்று சொல்லுவோம். இ என்ற சுட்டு அணிமையைக குறிப்பது. கதிரவன் முதலிய பொருள்கள் நமக்கு அருகில் இல்லா விட்டாலும், அவற்றைப்பற்றிய கினேவு அணிமையிலே உண்டாயிற்று அல்லவா? அதல்ை கெஞ்சுக்கு அணிமை யாகிய அவற்றை இவை என்று சுட்டுவதில் தவறு இல்லை." பாட்டில் புலவர் இவ் என்று சொல்கிருர், இவ் என்பது இவை என்ற பொருளையுடைய சொல். அவர் கினைத்த பொருளொடு சேர்த்து எண்ணும் பொருள்கள் சில உண்டு, ஞாயிற்றையும் திங்களையும் சொன்னவர் அவற்றிற்கு இனமாகிய மற்றக் கோள்களேயும் &ேனப்பது இயல்பு. ர்ே, நிலம், காற்று, வான் என்பவற்ருேடு தி" யையும் சொல்லலாம். காயாம் பூவோடு பிற மலர்களே யெல்லாம் சொல்லலாம். முன்னே சொன்னவற்றை ஒட்டிச் சொல்லத்த்க்க இவற்றைப் போன்ற பொருள்களே உள். என்று சுட்டினர். கினேயாதவற்றை அவ் என்று. சுட்டினர். என்ன இருந்தாலும் மனிதன் மனத்தில்ை கினேக்க முடியாதவையும் பல உண்டு. அவற்றிலும் இறைவன் தன்மை உண்டு. அவற்ற்ை யெல்லாம் பிற. என்ற சொல்லிலே அடக்கினர். 'எல்லாம் உன்னிட மிருந்து பிரிந்து உன்னிடமே ஒடுங்குவன' என்கிருர்.

  • 'இவள் என்ருர், தம் கருத்துக்கண் அணுமையான்' என்று புறநானூற்று உரையாசிரியர் (72 : 2) எழுதியது: இங்கே நினைப்பதற்குரியது. -