பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 - தமிழ் வையை

அதனல், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் ஏமம் ஆர்ந்த கிற் பிரிந்து

35. மேவல் சான்றன, எல்லாம்;

சேவல் ஓங்கு உயர் கொடியோயே !

0 (இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் உள்ள் தன்மைகள் நின்னுடைய தன்மைகளின் கூறு என்று தெரியும்) அக்காரணத்தால், இதுகாறும் கூறிய பொருள் களும், இவற்ருேடு தொடர்புடைய பொருள்களும், தொடர்பில்லாப் பொருள்களும், பிற பொருள்களுமாகிய எல்லாம் காவல் செய்யும் அருள் நிரம்பிய நின்னிடமிருந்து பிரிந்து மீட்டும் நின்னிடத்திலே பொருந்துதல் அமைந்தன; ஆண் கருடனகிய ஓங்கிய உயர்வையுடைய கொடியை உடையவனே!

அதனால்: மேலே ஒவ்வொரு பொருளிலும் இறைவன் தன்மை உளவாதலைக் கூறினர். அவ்வாறு பொருளின்கண் உள்ள தன்மைகள் நின்னுடைய தன்மைகளாவதல்ை என்று பொருள் கொள்ளவேண்டும். இவ்.இவை. உல்-உவை. அவ்-அவை. உவ் என்பது இடையில் உள்ளவற்றையும் மேலுள்ளவற்றையும் புலப்படுத்தும். அவ் என்பது சேய்மை யில் உள்ளவற்றைச் சுட்டும். இவை யென்றது கணிய வற்றை உவை யென்றது அவற்றிற் சேயவற்றை அவை யென்றது.அவற்றினும் சேயவற்றை; பிறவென்றது காணப் :படாதவற்றை’, (பரிமேலழகர்). ஏமம்-பாதுகாப்பு: இன்பம் என்றும் சொல்லலாம். ஆர்ந்த-பொருந்திய, பிறவுமாகிய எல்லாம் சான்றன என்று கூட்டுக. மேவல் - மீட்டும் நின்னிடத்தே ஒடுங்குதல். சான்றன - அமைந்தன. சேவல்கருடன். )

உலகத்துப் பொருள்கள் யாவும் இறைவல்ை படைக்கப் பெற்று, அவனலே பாதுகாக்கப் பெற்று, அவனிடத்திலே ஒடுங்குவன. படைப்பு, காப்பு, அழித்தல்