பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 47

என்ற மூன்றையும் இறைவன் செய்கிருன். சிற்பிரிந்து என்றகளுல் படைத்தலையும், எமம் ஆர்ந்த நின்' என்றகளுல் காக்கலையும், மேவல் சான்றன என்றகளுல் அழிக்கலையும் குறிப்பிட்டார். என்றது, உலகுயிர்களின் தோற்றமும் கிலேபேறும் ஒடுக்கமும் நின்கண்ண என்றவாரும் என்று பரிமேலழகர் எழுதியிருக்கிருர்,

கொடியின் இயல்பு

"சேவலோங்கு உயர் கொடியோயே!” என்று கூறிய வுட ன் புலவருக்கு அந்தக் கொடியைப் பற்றிய எண்ணம் விரிகிறது. கிருமாலின் அவதாரம் பல, அவற்றுள் ஒவ்வோர் அவதாரத்தில் ஒவ்வொரு கொடியை உடையவனுக விளங்கின்ை. ஆயினும் நாராயணமூர்த்திக்கு என்றும் உள்ள கொடி கருடக்கொடி, மற்றக் கொடிகள் பல இருந்தாலும் ஒப்பற்றதாக ஓங்கி நிற்பது கருடக் கொடி. கொடியாகவும் ஊர்தியாகவும் இருக்கும் கருடன் மிக்க சிறப்புடையவன். திருமாலின் அடியவர்கள் அவனைப் பெரிய திருவடி என்று சொல்லுவார்கள்.

சேவற் கொடியையுடைய திருமாலுக்கு வேறு என்ன என்ன கொடிகள் அவதார காலங்களில் இருந்தன? பலராமனுக வந்தபோது அவன் பனேக்கொடியை உடைய வகை இருந்தான். அதல்ை காலகேது என்ற பெயர் அவனுக்கு வந்தது. நாஞ்சிலாகிய கலப்பைக் கொடியும் யானேக் கொடியும் அவனுக்கு உண்டு. ஆலுைம் அவை யாவும் ஒப்பில்லாத ஒரு கொடியாகி கிற்கும் , தன்மை யுடையன அல்ல. எக்காலத்தும் ஒரே கொடியாக, எவ்விடத்தும் ஓங்கி உயர்ந்து கிற்பது கருடக்கொடிதான். மற்றவற்றிற்கு அப்படி ஒன்ருக உயர்ந்து நிற்கும் சிறப்பு இல்லே. &