பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் வையை

சேவல் ஓங்கு உயர் கொடி கின் ஒன்று உயர் கொடி பனை: கின் ஒன்று உயர் கொடி காஞ்சில்: 40 நின் ஒன்று உயர்கொடி யான;

கின், ஒன்ரு உயர்கொடி ஒன்று இன்று.

e சேவல் ஓங்கி உயர்ந்திருக்கும் கொடியையுடைய நினது உயர்ந்த கொடி ஒன்று பனே: நின் உயர்ந்த கொடி மற்ருென்று கலப்பை நின் உயர்ந்த கொடி பின்னும் ஒன்று யானே (இப்படிப் பல கொடிகள் இருந் தாலும்) நின்னுடைய கொடி ஒன்றேயாக உயர்ந்த கொடி இவற்றுள் ஒன்றும் இல்லே,

உயர் கொடியையுடைய நின் என்று கூட்டுக. உயர் கொடி ஒன்று பனே என்று பொருத்தவேண்டும். நாஞ்சில். கலப்பை. ஒன்று இன்று மேற்கூறியவற்றுள் ஒன்று இல்லை. 'இவ்வண்ணம் பல கொடியுளவேனும், நின் ஒன்முக உயர்ந்த கொடியை அக்கொடிகள் ஒன்றுதல் இன்று. ஒன்ருதல். முதலாதல். ஒன்றுதல்-ஒத்தல்' என்பது பரிமேலழகர் உரை..

அவனுடைய கொடிகளுள் பிறவற்றிற்கு இல்லாத சிறப்பை உடையதும், ஒன்ருக உயர்ந்ததும் ஆகிய கருடக் கொடியின் பெருமையை அளவிட்டுச் சொல்ல இயலாது. அந்தக் கொடியின் மிசையிருந்து காட்சி தரும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும் இருக்கிறவன். திருமாலின் அங்க அடையாளங்களின் பெருமையைச் சொல்லும்போது அப்பெருமானுடைய கொடியில் இருக்கும் கருடனுடைய பெருமையை எண்ணிப் பார்ப்பது பொருத்தந்தான்.

கருடன் என்ருலே அஞ்சுவது பாம்பு. பாம்புக் குலத்துக்குப் பகை கருடன். விடத்தையுடைய காகங்களின் உயிர் குடிப்பது; அவற்றின் உடம்பையும் விழுங்குவது.