பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 51. பகையும் நட்பும் இன்மை

இவ்வாறு பாம்புகளை அணியாகவும் குடையாகவும் இரையாகவும் கொள்ளும் கருடனக் கொடியாகக் கொண்ட திருமாலும் சிலரை அழித்தான்; துன்புறுத் தின்ை. அவர்களிடத்திலே அவனுக்குப் பகைமை உண்டா? -

இராவணன், இரணியன் முகவியவர்களை இறைவன் அழித்தான். அவர்களிடத்தில் உள்ள குற்றத்தைக் கண்டு அவர்கள் வருந்தும்படி வெகுண்டு துன்புறுத்தின்ை. விபீடணனையும் பிரகலாதனையும் பாதுகாத்தான் இப் படியே குற்றமுடையோரைத் தடிதலும் அன்புடை யோரைப் பாதுகாத்து அருளுதலும் அவன்பால் உண்டு என்பதைப் பழைய வரலாறுகள் சொல்கின்றன. ஆதலால் இறைவனுக்குப் பகைவர் இன்னர், நண்பர் இன்னர் என்ற வேறுபாடு உண்டோ? இந்த ஐயம் சிலருடைய உள்ளத்தில் எழலாம். மனிதர்களுக்குப் பகைவரும் நண்பரும் இருப்பது போல, இறைவனுக்குப் பகைவரும் நண்பரும் இருக் கிருர்கள் என்று சொல்லலாமா?

இறைவனுக்கு அரக்கர் அத்தனே பேரிடமும் பகை உண்டு என்று சொன்னல், இராவணன், கரன், கும்பகர்ண்ன் முதலியவர்கள் திறத்தில் அது உண்மை யாகும். இராவணன் புகைவன் என்ருல், அவனைச் சார்ந்த யாவருமே பகைக் குழுவினரே. ஆன்ல் அவன் தம்பியாகிய விபீடணன் இறைவனுடைய அருளேப் பெற்ருன். பகைவ லுடைய தம்பி என்ற கினேவு இருந்தால் அவனுக்கு அருள் கிடைத்திராது. அப்படியே பிரகலாதனுக்கு அருள் செய்த இறைவன் அவனிடம் அபிமானம் கொண்டிருந்தால் அவன் தந்தையை அழிக்காமல் இருக்க வேண்டும்.