பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 53

காக்கத்துக்கும் பகைவன் என்றும் சொல்லலாமா? சொல் வது பொருக்கம் அன்று.

பின், இந்த வேறுபட்ட விளைவுகள் உண்டாவதற்குக் காரணம் என்ன? சூரியனுடைய கதிரின் தன்மை ஒன்ரு கவே இருக்காலும் அதை ஏற்றுக் கொள்ளும் பொருளின் இயல்புக்கு ஏற்றபடி விளைவு உண்டாகிறது. சூரியன் மலர் களுக்கு கட்புப் பூண்டவன் என்று சொல்ல இயலாது, ரீலோற்பலத்தைக் குவிய வைப்பதளுல். பகைவன் என்று சொல்ல இயலாது, தாமரையை மலர வைப்பதல்ை. தாமரையின் இயல்பு சூரியன் கதிர்களைக் கொண்டு மலரும் இயல்பு. கீல மலரின் பண்பு கதிரவன் கதிர்களுக்கு முன் கூம்புவது. ஆதலின், மலர்தலும் கூம்புதலுமாகிய வேறு பாடுகளுக்குரிய வெவ்வேறு காரணம் கதிரவன் கதிரில் இல்லை; மலர்களின் தன்மையில் இருக்கிறது.

இறைவனுடைய திருவருளும் அத்தகையதுதான். பொல்லாதவர்களுக்கு அவன் அருள் வெகுளியாக விளே கிறது; துன்பமாக வருகிறது. கல்லவர்களுக்கு ஆதரவாக விளைகிறது; இன்பமாக வருகிறது. மக்கள், தேவர், அரக் கர், அசுரர் யாராயிருப்பினும் ஒரு சாதியோ, குலமோ, கூட்டமோஅவனுடைய ஆதரவுக்கும் வெகுளிக்கும் உரியது என்று சொல்வது.உண்மை அன்று. அவர்களுடைய தன்மை தான் இந்த இரு வகை விளைவுகளுக்கும் காரணமாக இருப்பது. பிறருக்குத் தீங்கு புரியும் வெம்மையுடை யோர், பாவம் செய்வோராவார். பாவத்தை மறம் என்றும் சொல்லலாம். மறம் புரிவோருடைய மறமே இறைவன் திருமுன் வருத்தமாக விளகிறது. புண் ணரியமாகிய அறம் உயிர்களுக்கு இனியது; தண்மையானது. அந்தத் தண்ணிய இயல்புடையோருடைய இயல்பே. இறைவன் திருமுன் இன்பமாக விளேகிறது.