பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. தமிழ் வையை

வெம்மை உடையவர்களுடைய கடுமையான குற். றத்தைக் கண்டு அவர்கள் வருங்.தும்படியான வெகுளியை இறைவன் தோற்றுவிக்கிருன்; விருப்பம் இல்லாதவனப் போல, பட்சபாதம் உடையவனப் போல, தோற்றுகிருன். வெம்மையாகிய மறம் இல்லாதவரிடத்துக் கடுப்பும் கோட்ட மும் (பட்சபாதமும்) இல்லாதவனேப்போலத் தோற்று கிருன். அப்படியே தண்மை உடையவர்களுக்கு அருள் செய்பவனைப் போலவும் ஈடு கிலேயில் இருப்பவ&னப் போலவும் விளங்குகிருன். அது இல்லாதவர்களிடம் அவை இல்லாதவனைப்போலத் தோற்றுகிருன்.

இவ்வாறு அவரவர்களுடைய அறத்துக்கும் மத்துக் கும் ஈடாகக் கடுத்தலும் கல்கலும் இறைவனிடம் விளேகின்றனவே அன்றி, தன்னைப் போற்று தவர்களென்ற காரணத்தால் அவர்கள் உயிரைப் போக்குதல் அவன் இயல்பு அன்று; தன்னைப் போற் றுகிறவர்கள் என்பதற் காக அவர்களுடைய உயிருக்கு இன்பம் செய்த லும் அவன் இயல்பு அன்று. அவன் அருள் எல்லோருக்கும் பொது வானது. அறம் செய்காருக்கு அக்க அருள இனிதாக இருக்கிறது; மறம் செய்தாருக்குக் கொடியதாக இருக்கிறது.

இறைவன் கல்லோருக்கு அருள்வதையும் அல்லோரை அடக்கி வருத்துவதையும் கருணையின் இருவேறு பகுதிகள் என்றே சொல்லவேண்டும். நல்ல குழந்தைக்குத் தின் பண்டம் தந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் காய், பொல்லாத குழந்தையை அடித்துச் சோறுகூடப் போடாமல் இருக்கிருள். இந்த இருவகைச் செயல்களுக்கும், தன் பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்ற தாயன்பே காரணம். தோற்றத்தில் ஒன்று இனிதாகவும் மற்ருென்று கொடிதாகவும் இருந்தாலும் இரண்டுக்கும்