பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 தமிழ் வையை

உயிரினிடத்தும் பகையோ, சிறப்பான விருப்போ இல்லை. அவனுக்குப் பகைவரும் இல்லை; கண்பினரும் இல்லை. இறைவன் அசுரரை அழிக்கான், அன்பரைக் காத்தான் என்று சொல்லும் வரலாறுகள் யாவும் இக்க இயல்புக்கு முரணானவை அல்ல. இந்த உண்மையைச் சற்ே Д0 சிந்தித்துப் போற்றி உணர வேண்டும். இல்லையானல் தெளிவு பிறவாது. இரணியன நரசிங்களுகி அழித்தான், பூமியை வராகமாகி எடுத்தான் என்று முன்னே புகழ்ந்து விட்டு, "அவனுக்குப் பகைவரும் இல்லை; கேளிரும் இல்லை' என்று சொன்னல், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறு பட்டதுபோலத் தோற்றலாம், ஆல்ை முன்னே சொன்ன கியாயங்களே யெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் வேற்றுமை இன்று என்று விளங்கும்.

கடு கவை அணங்கும் கடுப்பும் கல்கலும்

50 கொடுமையும் செம்மையும், வெம்மையும்

தண்மையும்

உள்வழி உடையை இல்வழி இலேயே, போற்ருர் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்று ஏம் ஆற்றல் இலேயே, நினக்கு மாற்ருேரும் இலர், கேளிரும் இலர் எனும்,

55 வேற்றுமை இன்று, அது போற்றுகர்ப் பெறினே.

0 கடுமையான குற்றத்துக்காக வருத்தும் கோபமும், அருள் செய்தலும், ஒருபாற் கோடித் தண்டிக்கும் கொடுமை யும், நடுநிலையும் ஆகிய இவை பாவமும் புண்ணியமும் உள்ள விடத்து உடையாய்; இல்லாத இடத்து இல்லாய். உன்னே வழிபடாதார் உயிருக்கும் வழிபடுவார் உயிருக்கும் மாற்றி அழித்தலைச் செய்வதும் இன்பம் செய்வதும் உன்பால் இல்லை. நினக்குப் பகைவரும் இல்லை, நட்பினரும் இல்லை: என்ருலும் (முன்னே சொன்னவற்றிற்கும் இதற்கும்) வேறு பாடு இல்லை, அதை ஆராய்ந்து கொள்வாரைப் பெற்ருல்,