பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 57

49-51. கடு நவை அணங்கும் கடுப்பு . கடுநவையின் பொருட்டு வருத்தும் கோபம்: நவை-குற்றம்: அணங்குதல். வருத்துதல்; கடுப்பு-கோபம். நல்கல்-அருள் செய்தல், கொடுமை-கோடுதல். செம்மை-நடுநிலை. வெம்மை-மறம்: பாவச்செயல். தண்மை-அறம்; புண்ணியச்செயல். உள்வழிஅவற்றை உடையோரிடம், இல்வழி-இல்லாதாரிடம்.

வெம்மை உடையோரிடம் கடுநவை அணங்கும் கடுப்பும் கொடுமையும் உடையாய்; இல்வழி இலை. தண்மையுடை யோரிடம் நல்கலும் செம்மையும் உடையாய்; இல்வழி இலை என்று முறையே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

52-3. போற்ருர்-பகைவர். போற்றுநர்-வழிபடுவோர். மாற்று-மாற்றுதல்; போக்குதல். ஏம் ஆற்றல்-இன்பத்தைச் செய்தல்.

54-5. மாற்ருேர்-பகைவர். கேளிர்-நண்பர். எனினும் என்பது எனும் என்று விகாரப்பட்டு நின்றது. போற்றுநர் பெறின் ஆராய்ந்து தெளிந்து கொள்பவரைப் பெற்ருல். போற்றுவாருக்கு இவ்விரண்டினுள்ளும் வேற்றுமை இல்லை யென்று விளங்கும் என்பது கருத்து,

‘என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து வெகுளியும் கோட்டமும் உடையையாய் அஃது இல்லாரிடத்து இல்லே யாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும் செம்மையும் உடையையாய் அஃது இல்லாரிடத்து இல்லை யாதலும் அல்லது, நினக்குப் பகையாயினர் உயிரின்கண் அதனை மாற்றுதல் தொழிலும், நினக்குக் கேளிராயினர் உயிரின் கண் அதற்கு ஏமம் செய்தல் தொழிலும் உடையை அல்லை; அவ்விருதிறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு' என்றும், உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாரும் என்றும் எழுதுவர் பரிமேலழகர் 0