பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - 5

வையைஇரு பத்தாறு, மாமதுரை நான்கு என்ப, செய்யபரி பாடல் திறம்

என்ற பழம் பாடலால் திருமாலைப் பற்றிய பாடல்கள் எட்டும், முருகனைப் பற்றியவை முப்பத்தொன்றும், துர்க் கையைப் பற்றியது ஒன்றும், வையையின் புகழ் பேசும் பாடல்கள் இருபத்தாறும், மதுரையைப் பற்றியவை நான்கும் இந்தத் தொகை நூலில் இருந்தன என்று தெரிய வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் புத்தகத்தில் 22 பாடல்களும், பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டும் இரண்டு பாடல்களுமாக 24 பாடல்களே எஞ்சி யுள்ளன. இந்த இருபத்து நான்கில் திருமாலைப் பற்றியவை ஏழு முருகனைப் பற்றியவை எட்டு, வையையைப் பற்றி . யவை ஒன்பது. இந்தத் தொகை நூலைத் தொகுத்த புலவர் இன்னரென்பதும், தொகுக்கும்படி வேண்டியவர் இன்ன ரென்பதும் தெரியவில்லை.

பரிபாடலைத் தேடி எடுத்துப் பரிசோதித்துப் பரி மேலழகர் உரையுடன் தாம் எழுதிய அருங் குறிப்புக்களையும் சேர்த்து 1918-ஆம் ஆண்டில் என்னுடைய ஆசிரியப் பிரானகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் வெளி யிட்டார்கள். அப்பால் 1935-ஆம் ஆண்டில் பொருட் சுருக்கத்தையும் சேர்த்து இரண்டாம் பதிப்பை வெளி யிட்டார்கள். அந்தப் பதிப்பு நடைபெறும் பொழுது உடனிருந்து பணிபுரியும் பேறு எளியேனுக்குக் கிடைத்தது.

சிங்க காலத்து மக்கள் கடவுளை வழிபட்ட முறை கடவுளைப் பற்றி அவர்கள் அறிந்த செய்திகள் முதலியவற்: றைத் தெரிந்து கொள்ளத் தொகை நூல்களில் அங்கங்கே உள்ள சில அடிகள் உதவுகின்றன. கடவுள் வாழ்த்தாக அந் நூல்களில் உள்ள முழுப் பாடல்களிலிருந்தும் பல செய்திகள் தெரியவருகின்றன. பத்துப் பாட்டில் உள்ள திருமுரு காற்றுப்படை கடவுளைப் பற்றிய பெரிய பாட்டு,

பரிபாடல் ஒன்றில்தான் ఉLడి1 பற்றிய La பாடல்களை ஒருங்கே காண முடிகிறது. திருமால், முருகன்