பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 59

எப்போதும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடு இருப்ப வனைல் அவனுக்கு அதுவே வடிவம் என்று சொல்லலாம். ஒருவன் நாடகக்திலே பல வேடம் புனைபவகை இருங் தாலும் அத்தனே கோலங்களும் அவனுடையன அல்ல. தனக்கென்று அமைந்த வடிவம் உண்டானல் அது ஒன்ருகத் தான் இருக்க முடியும். திருமாலுக்குப் பல வடிவங்கள் உண்டு என்று சொல்லும்போது குறிக்கும் வடிவங்கள் அன்பர்களுக்கு அருள் கரும் பொருட்டு மேற்கொண்ட வைகளே. நாடகம் ஆடுவோன் நாடக ரசிகர்களே மகிழ்ச்சி யில் ஆழ்த்த வெவ்வேறு கோலம் புனேவது போன்றது. இது. ஆதலின் தனக்கென்று வரையறையாக யாவரும் கண்ணுல் காணும் ஒரே வடிவம் அவனுக்கு இல்லை என்ருர்,

அப்படி இல்லையாயினும் அவன் அருள் பெற்ருர் காணும் அழகிய வடிவங்கள் அவனுடையனவே; அவன் வேண்டுமென்று மேற்கொள்வனவே. அவற்றின் அழகை உவமையோடு சார்த்தி எண்ணிப் பார்க்கிருர் புலவர்.

திருமால் இருள் போன்ற கரு நிறமுடையவன். ஆனல் நம்முடைய கண்ணே மறைக்கிற இருளே அதற்கு உவமை சொல்லலாமா? இருளில் இல்லாத கவர்ச்சி அவன் மேனிக்கு உண்டு. இந்த இருளே காம் ஏற்றுக்கொள்வதில்லேநமக்கு விருப்ப மில்லாத துன்பத்தை இருள் என்று சொல் கிருேம். ஆல்ை இறைவனுடைய திருமேனியோ பல முறை கண்டு மகிழ்வதற்குரியது. நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாக ஓர் இருட்டு இருக்குமானல் அதை அப்பெரு மான் திருமேனிக்கு உவமை சொல்லலாம், அந்த இருளின் இருக்கையென்றே அவன் திருமேனியைக் கூறலாம்." அழகிய லே மணியையும் சொல்லலாம்.

  • அல்லையாண்டு அமைந்த மேனி அழகன்' என்பது: கம்பர் வாக்கு.