பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 6 $”

திருமகள் வீற்றிருத்தலைக் காணலாம் அவள் அவன் கரிய கிருமார்பிலே ஒரு சிறிய மறுப் போல இருக்கிருள். மறுவாலுைம் அழகு தருவது; புனே மறு. அது பொன்னிறம் வீசுவது. திருமகள் பொன் நிறத்தவள் அல்லவா?

பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப !

0 பொன்னைப் போலத் தோற்றம் அளிக்கும், புனேந்தது போன்ற, திருமகளாகிய மறுவையுடைய மார்பனே !

புனே - அலங்கரித்தால் போன்ற, திருமகளாதலால் புனை மறு என்ருர் (பரிமேலழகர்.) திருமகளே மறுவாக இருத்தலின், திரு மறு மார்பு” (பெரும்பாணுற்றுப்படை, 29) என்று பிற புலவரும் கூறினர். இதனை பூரீவத்ஸ்மென்பர் வடமொழியாளர். ெ

அவனுடைய திருமேனியையும் மாலையையும் மார்பையும் சொன்ன பிறகு மேலும் சொல்ல ஆசைப் படுகிருர் புலவர். ஆல்ை ஒவ்வோர் அங்கமாகச் சொல்லிக் கொண்டே போல்ை மிக மிக விரிவாகச் சொல்லவேண்டி யிருக்குமே! அவன் திருவுருவத்தை உள்ளக் கண்ணிலே கிறுத்திப் பார்க்கிருர். மேலும் கீழும் பார்க்கிருர், மேலே பளபளவென்று ஒளி விடும் திருவிழிகளையும் கீழே யாவர்க்கும் பற்றுக் கோடாக இருக்கும் திருவடிகளையும் காண்கிருர். அவை இரண்டையும் சொல்லி அவனுடைய திருவுருவ வருணனையை நிறைவேற்ற எண்ணுகிருர் புலவர்.

அவனுடைய கண்ணுக்கு எதை உவமை கூறலாம்? கமலக் கண்ணன் அல்லவா? தாமரையைத்தான் சொல்ல வேண்டும். உலகில் சேற்றிலே முளேக்கும் தாமரையைச் சொல்ல அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. சேற்றிலே முளைக்காத காமரை ஒன்று இருந்தால் அதைச் சொல்லலாம். அப்படி ஒன்று இருக்கிறதா? தாமரை சேற்றிலே