பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.52 தமிழ் வையை

தோன்றுவதல்ைகான் பங்கயம் என்று பெயர் பெற்றது. பங்கயம் அல்லாத காமரை எது?-புலவர் யோசித்துப் பார்க்கிருர், சேற்றிலே முக்ளக்காக தாமரை ஒன்றை அவர் கண்டுபிடித்துவிட்டார். அது உலகிலுள்ள தாமரை களேப் போன்றதன்று அது தோன்றிய இடமும், அதனே இடமாகக் கொண்ட பொருளும் மிக மிகச் சிறப்பானவை.

அவனுடைய திருவுந்தியிலே தோன்றிய தாமரையைப் பங்கயம் என்று சொல்ல முடியுமா? அது சேற்றில் முளைக்காத தாமரை; அடுக்கடுக்காக இதழ்களையுடைய தாமரை, தாமரையின் இலக்கணம் ஒன்றும் குறைவின்றி மலர்ந்த தாமரை. அதைக் கான் அளப்பரியவகிைய அப் பெருமானுடைய கண்ணுக்கு உவமை சொல்ல வேண்டும்.

கின்னின் தோன்றிய கிரை இதழ்த் தாமரை அன்ன நாட்டத்து அளப்பரியவை.

  • g ைநின்னிடத்திலே (உந்தியில்) தோன்றிய வரிசையான இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண்ணே யுடைய, அளத்தற்கு அரியை.

நிரை-வரிசை. இந்தத் தாமரையில் பிரமன் தோன்றி னன். நாட்டம்-கண். அளப்பரியை என்பது அளப்பரியவை எனச் செய்யுளை நோக்கி வந்தது; ஒர் அகரம் இடையிலே புதிதாகச் சேர்ந்திருக்கிறது. இசை நிறையும் இடைச்சொல், (பரிமேலழகர்). )

அவனுடைய திருவடிக்கு எதனே உவமையாகச் சொல் வது? அதற்கு உவமை சொல்லி முடியாது. இறைவனுக் காவது உவமை சொல்லலாம்; அவன் திருவடிக்குச் சொல் வது அரிது. அவனுடைய அங்கந்தானே அது' என்று கேட்கலாம். அவன் திருவுருவத்தில் திருவடி ஓர் அங்கக்