பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 63

தான். அவனுக்கு அது அங்கம், மைக்கோ அவனுடைய உருவம் முழுவதும் தெரியாது; தெரியவேண்டிய அவசி யமும் இல்லை. மேக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவ லுடைய திருவடிகான். தென்னமரத்தில் நமக்குச் சிறந்த தாகப் படுவது தேங்காய்தான். அதுபோல் இறைவன் திருமேனியில் அழகும் வலிமையும் உடைய பல அங்கங்கள் இருந்தாலும் நம்மை ஆள்வதற்குப் பூமியின்மேல் நடந்து வர உதவுவது அவன் திருவடியே. நமக்குப் பற்றுக் கோ.ாக இருப்பதும் அதுவே. அதினுல்தான் திருவள்ளு வர் க. வுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் "வாலறிவன் கற்ருள்', 'மலர்மிசை எகின்ை மாணடி', 'வேண்டுதல் வேண்டrமை யிலானடி', 'தனக்குவமை யில்லாதான் தாள்', 'அறவாழி யந்தணன் தாள்', 'எண்குணத்தான் தாள்', 'இறைவன் அடி' என்று முழுமுதற் கடவுளின் திருவடிகளேயே எடுத்துச் சொன்னர். நம்மாழ் வாரும் திருவாய்மொழியின் முதற் செய்யுளில், 'துயரறு சுடரடி தொழுதெழல் மனனே' என்று கூறினர்.

ஆகலின், “கின்னேக் காட்டிலும் எமக்குச் சிறந்த திருவடியை உடையாய் ' என்று பாராட்டுகிருர் புலவர்.

கின்னிற் சிறந்த கின் திருவடியவை.

ைநின்னைக் காட்டிலும் எங்களுக்குச் சிறந்த நின் திருவடிகளை உடையாய்.

நின்னின் நின்னைவிட சிறந்த அடி, நின் அடி என்று கூட்டுக. திருவடியை என்பது திருவடியவை என விகாரமாக நின்றது. ஒசை கூட்டிச் சொல்லும்பொருட்டு அகரத்தைச் சேர்த்துப் பாடினர். வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளிணையை உடையை. (பரிமேலழகர்) 0