பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{54 தமிழ் வையை

முதலில், இறைவனுக்கு இன்னத கான் வடிவம் என்ற வரையறை இல்லை என்ருர். அப்பால் அவனுடைய கிரு வுருவத்தைப்பற்றி எண்ணிர்ை. இனி அவனுடைய குணங் களைச் சொல்லுகிருர். தனித் தனியே எடுத்துச் சொல்லிக் கடைசியில் முற்றச் சொல்ல முடியாமையின், “எல்லாம் நீயே" என்று முடிக்கும்படி ஆகிவிடுகிறதல்லவா? ஆதலின் குணங்களைச் சொல்லும்போதும் அப்படிக் கொடங்கி முடிக்க வேண்டாம் என்று புலவர் தினத்தார்போலும்! ‘கடவுள் என்று சொல்வதற்குரிய தன்மைகள் யாவும் உன்னிடம் கிரம்பியுள்ளன என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடுகிரு.ர்.

கின்னிற் சிறந்த நிறை கடவுளவை

0 நின்னிடத்தில் சிறப்பாக அமைந்த நிறைந்த கடவுள் தன்மையை உடையாய்.

நின்னில் - நின்னிடம். கடவுளவை - கடவுளே: கடவுள் தன்மையை உடையாய். அகரம் இசை நிறைவுக் காக வந்தது. இதற்கு, நின்னேக்காட்டிலும் சிறந்த நிறைந்த கடவுள் தன்மையாகிய அருளே உடையாய் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனுடைய தன்மை பல எனினும் உயிர்க்ளுக்கு மிகப் பயன்படுவது அவன் அருளே ஆதலாலும், அவனுடைய குணங்கள், செயல்கள் என்று தனித்தனியே சொன்னலும் அவை அனைத்துக்கும் அவன் அருளே மூலமாதலாலும் அதுவே சிறந்ததாயிற்று. கொன்றருளின்ை, எழுந்தருளினுன், சினந்தருளினுன் என்று அவனுடைய செயல்கள் அனைத்தையும் அருட்செயலின் வகைகளாகச் சொல்லும் வழக்கு இதைத் தெளிவாக்கும்.0

இவ்வாறு சொன்ன புலவருக்கு மீட்டும் யோசனை உண்டாயிற்று. இறைவனுடைய தன்மைகள் அளவிடற்.