பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 65

கரியன. “உயர்வற உயர் நலம் உடையவன்' அவன் எல்லாக் குணங்களும் அவனுடைய அருளிலும் மாயை யிலும் தோற்றியவை. ஆதலின் தெய்வத்தன்மைகளே மாத்திரம் சொன்னுல் போதுமா? ஆகவே அதோடு கிறுத் காமல், அத்தகைய தெய்வத் தன்மைகளை அன்றி வேறு தன்மைகளும் கின்பால் உள. அவற்றை'எம் போலியரால் எவ்வாறு அறிய முடியும்? வேதங்க்ஆள நன்கு ஆராய்ந்த முனிவர்கள் தம் அறிவிலுைம் அநுபவத்திலுைம் உணர்ந்து அவ்வப்போது வெளியிடுகிருர்கள். அவற்றை யெல்லாம் முடிவுபோக அறிந்து கூறுவது இயலுமா? உன்ன வணங்கு வதோடு உன் அருள் பெற்ற முனிவர்களையும் வணங்கு கிருேம். அவர்கள் உன்னைப் போன்றவர்கள். கின்னே ஒத்த அந்தணர்கள் அறிந்த அரிய உபநிடதப் பொருள் தெரிங் தால் கின் குணங்களை உணரலாம். அவர்கள் அறிந்தவை அவை; எம்மால் அறிதற்கு இயலாதவை என்று சொல் கிருர்.

அன்னேர் அல்லா வேறும் உள, அவை

கின்னேர் அன்னேர் அந்தணர் அருமறை.

ைஅத்தன்மையல்லாத வேறு தன்மைகளும் நினக்கு உள்ளன. அவை நின்னேயொத்த முனிவர்கள் உணர்வதற் குரிய அரிய உபநிடதத்தின் இரகசியப் பொருள்கள்.

அன்ன ஓர் அல்லா எனப் பிரிக்கவேண்டும்; ஒர்: அசை, அன்ன என்பதன் இறுதி.அகரம் மறைய, அன் என நின்று ஓர் என்பதுடன் சேர்ந்து அன்னேர் என ஆயிற்று. நின் ஒர் அன்னேர் என்று பிரிக்கவேண்டும்; இங்கும் ஓர் என்பது அசை நிலை; அதற்கு ஒரு பொருளும் இல்லை. மறை - இரகசியம். மறைந்த பொருள் உடைமையால் வேதத் துக்கும் அதன் முடியாகிய உபநிடதங்களுக்கும் மறையென்ற பெயர் அமைந்தது. ) -

5