பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழ் வையை

இறைவன் திருமேனி உடையவனல்ல யிைனும் அருளுடையாருக்குக் காட்டும் கிருமேனியைப்பற்றி முதலில் கூறி, அப்பால் அவன் இயல்புகளைக் கூறினர். பிறகு அவன் இருக்கும் இடங்களைக் கூற வருகிருர், இறைவன் எங்கும் இருக்கிருன். என்ருலும் அவனே A&ணந்து வழிபடு வதற்கு என்று சில இடங்களை அருள் பெற்ற சான்ருேர்கள் வரையறையாக வைத்திருக்கின்றனர். திருக் ோயில்களை அமைத்து அங்கே இறைவனுக்குரிய திருவுருவங்களே நிறுவி வழிபடும்படி செய்திருக்கிரு.ர்கள் அவ்வாறு திருவுருவங்களைக் கோயிலின்றியே மாக்கின் அடியிலும் வேறு இடங்களிலும் வைத்து வழிபடுவதும் உண்டு. முதலில் அழகிய மரங்களில் இறைவன் இருப்பதாக எண்ணி, அவற்றை இறைவன் உருவாக வழிபட்டார்கள். அப்பால் அவ்விடங்களில் அவனுடைய உருவை அமைத்து வழிபட்டார்கள். பிறகு கோயில் கட்டி, அங்கே அவள் திருவுருவத்தை கிறுவி வழிபட்டார்கள்.

ஆலமரம் மரங்களிலே பெரியது. அது விழுது விட்டுப் பரந்து விற்பது; பலகாலம் இருப்பது; தன்னுடைய கிழலில் பல மக்களுக்கு இடம் கொடுப்பது. அதனிடம் பலருக்கு நிழல் தரும் தன்மை இருப்பதை எண்ணி, இறைவன் பலருக்கும் அருள் கரும் இயல்பை அதனுடன் ஒருங்கு வைத்துப் போற்றினர்கள். அகனிடம் தெய்வத் தன்மை இருப்பதாக கினைந்து வழிபட்டார்கள். ஆலமரம் தெய்வம் உறையும் மரம் என்ற கம்பிக்கை பழங்காலத்தில் இருக்க தைப் பழம் பாடல்கள் தெரிவிக்கின்றன. பிறகு, அங்கே கடவுளுருவங்களும் கோயில்களும் எழுந்தன. கிருவாலக் துறை, திருவாலங்காடு, திருப்பழுவூர் முதலிய இடங்களில் சிவபெருமான் ஆலடியில் உறைகின்ருர், 'ஆலமர் கடவுள்' என்று பழ நூல்கள் கூறும். “கடவுள் ஆலத்துக் தடவுச்சினேப் பல்பமும்' என்பது புறநானூறு (199 : 1.)