பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் - 67

இப்படியே கடம்பி லும் இறைவன் இருப்பதாகக் கொண்டார்கள். கடம்பில் முருகன் உறைகின் முன் என்ற செய்தியைத் திருமுருகாற்றுப்படை சொல்கிறது; "புதுப்பூங் கடர்பும்" (285); “கடம்பமர் காளே' என்று தேவாரம் சொல்கிறது.

ஆற்றின் நடுவிலே இருக்கும் கிட்டுக்குத் துருத்தி என்று பெயர். ரங்கம் என்று வடமொழியில் வழங்கும். அதுவும் தெய்வத்தை வழிபடுவதற்குரிய இடம் என்று சான் ருேர் கொண்டனர். திருவரங்கம் காவிரி நடுவில் அமைந்த கலம் அல்லவா? திருத்துருத்தி (குற்ருலம்) என்பது ஒரு தலம். அது ஒரு காலத்தில் ஆற்றினிடையே திட்டாக இருந்ததுதான்.

இறைவனே வணங்கும் இடங்களில் மற்முென்று மலை. இன்று தமிழ் நாட்டில் பெரும்பாலான மலைகளில் திருக் கோயில்களைக் காணலாம். கோயில் இருந்தாலும் இல்லா விட்டாலும் முருகன் மலைகளில் எழுந்தருளியிருக்கிருன் என்ற கருத்துடையவர்கள் தமிழர்கள். குன்று தோருடும் குமுகன் என்று பாராட்டுவார்கள். -

ஆற்றின் துறைகளிலும், பொய்கைக் கரையிலும், மரத்தின் அடியிலே மக்கள் கூடும் அம்பலத்திலும், பிற இடங்களிலும் தெய்வத்தை வழிபடுவது மரபு. இவ்வாறு பல இடங்களில் பல பல உருவமும் காமமும் உடையனவாக வைத்து வணங்கும் தெய்வங்கள் எல்லாம் ஒரே கடவுளின் வேறு வேறு கிலைகளே. இதைப் புலவர் சொல்கிருர்,

ஆலமரத்தின் தளிர் சிவப்பாக இருக்கும்; அமுல் போலத் தோற்றும். அதன் நிழல் கொழு நிழல். அது மற்ற மரங் களே விட அதிகமான கிளேகளை உடையது. பல சினைகளேப் பெற்ற ஆலமரத்திலும், கடம்பிலும், ஆற்றின் நடுவிலும்,