பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் வையை

மலையிலும், வேறு இடங்களிலும் வேறு வேறு பெயரோடு எழுந்தருளுபவன் தோன்' என்று பாடுகிருர் புலவர்.

அழல்புரை குழைகொழு நிழல் தரும் பல சினை ஆலமும் கடம்பும் கல் யாற்று நடுவும் கால் வழக்கு அறுகிலேக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறு வேறு பெயரோய் !

0 நெருப்பை ஒத்த தளிரையும் கொழுவிய நிழலையும் தரும் பல கிளைகளையுடைய ஆலமரமும், கடம்பமரமும், நல்ல ஆற்றின் நடுவிடமும், காற்று வழங்குவது அறும்படி தடுத்து நிற்றலையுடைய மலைகளும், பிற இடங்களும் ஆகிய அவ்வவ் விடங்களில் மேவிய வேறு வேறு பெயர்களை உடையவனே !

அழல் புரை நெருப்பையொத்த. குழை தளிர். குழை தரும், நிழல் தரும் என்று கூட்டுக. சினை கிளை. கால் வழக்கு அறும் நிலை காற்று வழங்குதல் அற்ற நிலையை யுடைய, காற்று வழங்காத திணிந்த நிலையையுடைய குன்ற மென்க’ (பரிமேலழகர் உரை.) 0

இப்படிச் சில இடங்களே வகுத்துக்கொண்டு அங்கே இறைவன் இருக்கிருன் என்று வழிபடுவதல்ை, மற்ற இடங்களில் அவன் இல்லே என்று கொள்வதா? அது தவறு. இறைவன் எங்கும் கிறைந்தவன். விஷ்ணு என்ற திரு காமமே அவ்ன் யாண்டும் நிறைந்திருப்பவன் என்பதை உணர்த்துவது. இறை என்ற சொல்லும் அதே பொருளைத் தருவது. ஆதலின் அவன் இல்லாக இடமே இல்லை.

முன்பு, அவன் குணங்கள் இன்ன இன்ன பொருள் களில் உள்ளன என்று சொல்லத் தொடங்கினவர், எல்லாப் பொருள்களிலும் கின் குணங்களே உள்ளன என்று கூறி முடித்தார். அப்படியே இன்ன இன்ன இடங்களில் எழுங் தருளியிருக்கும் தெய்வங்களாக இருப்பவன் ேேய என்று