பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் வையை

என்னும் இருவரைப் பற்றிய அற்புதமான பாடல்களைப் பரிபாடலில் காணலாம். திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலை மலை, இருந்தையூர், மதுரை ஆகிய ஊர்களைப் பற்றிய வருணனைகளும் அவற்றில் வருகின்றன. இப்பொழுது கிடைக்கும் பாடல்களின் சிறப்பை உணரும்போது, கிடைக் காமற் போன பாடல்களில் இன்னும் என்ன என்ன அருமை யான செய்திகள் இருந்தனவோ என்று எண்ணி இரங்க நேர்கிறது.

பரிபாடவில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் உரிய துறையும் அதைப் பாடிய புல்வரின் பெயரும் அப்பாடலுக்கு இசை வகுத்த புலவரின் பெயரும் இன்ன பண்ணிற் பாடு வதற்கு உரியது என்பதும் அவ்வப் பர்ட்வின் பின்னே உள்ள குறிப்புக்களால் அறியலாம்.

இந்தப் புத்தகத்தில் இரண்டு பாடல்களுக்குரிய விளக் கத்தைக் காண்லாம்." திருமாலேப் பற்றிய நான்காம் பரி பாடலும், வையையைப் பற்றிய ஆரும் பரிபாடலும் இதில் உள்ளன. முதற் பாட்டு, புறப்பொருளில் கடவுள் வாழ்த்து என்னும் துறையைச் சார்ந்தது. அடுத்தது அகப்பொருளில் மருதத்திணையில் தலைவி வாயில் மறுத்தது என்னும் துறை, ய்ைச்சார்ந்தது. திருமாலைப் பற்றிய் பாட்டு 73 அடிகளால் ஆகியது; வையையைப் பற்றியது 106 அடிகளே உடையது. ஆக இப் புத்தகத்தில் 179 அடிகளுக்குரிய விளக்கம் இருக் கிறது. இவ்விரண்டையும் முறையே பாடியவர்கள் கடுவன் இள எயினனர், ஆசிரியர் நல்லந்துவளுர் என்போர். கடுவன் இள எயினனர் இந்தப் பாடலையன்றித் திருமாலைப் பாடிய மற்ருெரு பாட்டும், முருகக் கடவுளைப் பாடிய பாட்டு ஒன்றும் பரிபாடலில் இருக்கின்றன. stíflufř நல்லந்துவனர் வையையைப் பற்றிப் பாடிய வேறு இரண்டு பாடல்களும், முருகக் கடவுளைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்றும் அத்தொகை நூலில் உள்ளன. கலித்தொகையில் உள்ள நெய்தற்கலியை இயற்றியதோடு, அந்த நூலைத் தொகுத்தவரும் இவரே.

米 4

பாயிரும் பணிக்கடல்' என்ற5-ஆம் பiபாடலின் விளக்கத்தை * பெரும் பெயர் முருகன்' என்ற புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன்.